சூடேற்றும் சவுந்தர்யா ஷர்மா.. குளியல் அறை போஸ்
சென்னை : நடிகையும் மாடலுமான சவுந்தரியா ஷர்மா, படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அது தற்போது வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரைத்துறை நடிகை சவுந்தரியா ஷர்மா. இவர் ஒரு பல் மருத்துவராவார். இவர் டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றி உள்ளார். ஆனால் சினிமாவின் மீது இருந்த காதலால் அவர் மருத்துவ பணியை விட்டுவிட்டார்.

மும்பையில் உள்ள ஒரு கூத்து பட்டறையில் முறைப்படி நடிப்புக்கான பயிற்சியை பெற்றார். மேலும் பாடல் பாடுவதிலும் கிட்டார் வாசிப்பதிலும் முறையான பயிற்சி எடுத்துக்கொண்டார்.
இதைடுத்து அனுபம் கிர் தயாரித்த ராஞ்சி டைரில் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர். தனது நடிப்புத் திறனை முழுவதுமாக வெளிப்படுத்தினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு நல்ல பெயரை தேடித் தந்தது.
மேலும், ராஞ்சி டைரில் என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக முதல் படத்திலேயே ஜீ சினிமா விருது, ஸ்டார் ஸ்கீரின் விருது, சிறந்த பெண் அறிமுக நடிகை விருது என மூன்று விருதுகளை பெற்று புகழ் பெற்றார்.

மேலும் வொண்டர் வுமன்1984 என்ற படத்தில் ஆக்சன் செய்தும் அசத்தியுள்ளார். மேலும், சொந்த தயாரிப்பு நிருவனத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்த ஷர்மா மஸ்டடு அன்டு ரேட் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி உள்ளனர்.
சினிமா விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்களில் பங்கேற்று சிறப்பான நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்து வருகிறார். மேலும், மாடல் அழகியான ஷர்மா பல பேஷன் ஷோவில் பங்கேற்று பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் இவர், தனது இணைய ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவது இல்லை. அவ்வவ்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை போட்டோசூட் செய்து அதை பதிவேற்றி ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்துள்ளார்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் செம வைரலாகி உள்ளது. குளியல் அறையில் பாத் டப் மேல் படுத்தும், அமர்ந்தும் விதவிதமான போஸ்களை கொடுத்துள்ளார் ஷர்மா. இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் பல வந்தாலும் மோசமான பல கருத்துக்களும் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











