காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
சென்னை: பாலிவுட் நடிகரான வருண் தவான் நடாஷா திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் குவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் வருண் தவான் தனது குழந்தை பருவ தோழியான நடாஷாவை காதலிப்பதாக தகவல் வெளியானது.

வாயை திறக்காத வருண்
வருண் தவான் பாலிவுட்டில் அறிமுகமானது முதலே நடாஷாவுக்கும் வருண் தவானுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால், இதுகுறித்து வருண் இதுகுறித்து வாயே திறந்தது இல்லை.

நடாஷாவுடன் திருமணம்
காதல் விஷயத்தில அமைதியாக இருந்து வந்த வருண் தவான், திடீரென்று திருமண அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து மும்பைக்கு தெற்கே 120 கி.மீ தொலைவில் உள்ள அலிபாக் நகரில் உள்ள ரிசார்ட்டில் நேற்று மாலை வருண் தவான் தனது காதலியான நடாஷாவை திருமணம் செய்துக் கொண்டார்.

வாழ்நாள் காதல் துணை..
மேலும் தனது திருமண போட்டோக்களையும் வருண் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களுக்கு, வாழ்நாள் காதல் துணை, இப்போது அதிகாரபூர்வமாக மாறியது என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துகள்
தம்பதியினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். சக பாலிவுட் கலைஞர்கள் பலரும் வருணுக்கு தங்கள் திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஷன் டிஸைனிங்
வருண், நடாஷா திருமணத்தை தொடர்ந்து #NatashaDalal என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. நடாஷா, ஃபேஷன் டிஸைனிங் பட்டம் பெற்றுள்ளார். அவரது பெயரில் தனியாக பிராண்ட் அறிமுகம் செய்து பிஸ்னஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











