காதலர் தினத்தில் தமன்னாவுடன் காதலை உறுதிப்படுத்திய விஜய் வர்மா.. லவ் எமோஜியுடன் பதிவு!
மும்பை : தென்னிந்திய அளவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை தமன்னா.
தற்போது பாலிவுட் படங்களில் நடித்துவரும் தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் வசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருவரும் முத்தங்களை பகிர்ந்துக் கொண்ட வீடியோ வெளியாகி ட்ரெண்டானது.

நடிகை தமன்னா
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் தமன்னா தற்போது இந்தியில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார். 30 வயதை கடந்த தமன்னாவின் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் வர்மாவுடன் தமன்னா டேட்டிங்
இந்தக் கேள்விக்கு அவர் தன்னுடைய செயலால் பதிலளித்து வருகிறார். பாலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா டேட்டிங்கில் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இவர்கள் இருவரும் பல்வேறு பார்ட்டிகளில் இணைந்து தென்பட்ட நிலையில், இருவரும் நண்பர்கள் என்றே கூறப்பட்டது.

பிரபல பாலிவுட் நடிகர்
ஆனால் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் பார்ட்டியில் இருவரும் இணைந்து காணப்பட்டனர். தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் லிப் லாக் கொடுத்துக் கொண்ட வீடியோ வெளியாகி ட்ரெண்டானது. விஜய் வர்மா இந்தியில் பிங்க், பாகி 3, டார்லிங்க்ஸ் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

விரைவில் திருமணம்?
கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில்தான் விஜய் வர்மாவுடன் கலந்துக் கொண்டார் தமன்னா. இருவரும் டேட்டிங்கில் உள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை தமன்னா வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காதலர் தின பதிவு
இந்நிலையில் இன்றைய தினம் காதலர் தினத்தையொட்டி, விஜய் வர்மா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இரண்டு கால்களும் இடையில் லவ் எமோஜியும் காணப்படுகிறது. இந்தப் போஸ்ட்டை அவர் வெளியிட்டவுடன் அந்த மற்றொரு கால்கள் தமன்னாவுடையது என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமன்னா குறித்து விஜய் வர்மா ஹின்ட்
அந்த உடை மற்றும் ஷுக்களுடன் தமன்னா போஸ்ட் செய்த மற்றொரு பதிவையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதனால், விஜய் வர்மா, காதலர் தினத்தில் தமன்னாவுடனான காதலை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் அடுத்தடுத்த நடிகர், நடிகைகள் திருமணம் செய்துவரும் நிலையில் விரைவில் தமன்னாவும் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











