10 அப்பார்ட்மெண்டை வாங்கிப்போட்ட அமிதாப்பும் அபிஷேக்கும்.. விலை இவ்வளவு கோடிகளா.. அடேங்கப்பா!
மும்பை: இந்தியில் பிக் பி என்று அழைக்கப்படுபவர் அமிதாப்பச்சன். 40 ஆண்டுகளை கடந்து இவர் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழிகளில் நடித்து வரும் நடிகராகவும் மாறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன் நடித்து வெளியான வேட்டையன் படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.
முன்னதாக பிரபாசுடன் அமிதாப்பச்சன் கல்கி 2898 ஏடி படத்திலும் நடித்திருந்த நிலையில், அவரது கேரக்டர் மிகுந்த கவனத்தை பெற்றது. இந்தப் படத்தின் 2வது பாகத்திலும் அவர் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். அபிஷேக் பச்சனும் பாலிவுட்டில் பிரபல ஹீரோதான். இவரது மனைவி ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

நடிகர் அமிதாப்பச்சன்: நடிகர் அமிதாபச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இவரும் பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றனர்.ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன் நடித்துள்ள வேட்டை என் படம் கடந்த 10ம் தேதி ரிலீசாகி, அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. முன்னதாக அமிதாப்பச்சனின் படங்கள் தமிழில் ரிலீஸ் ஆனநிலையிலும் நேரடி தமிழ் படமாக வேட்டையன் படம் அவருக்கு அமைந்துள்ளது. இது மட்டுமில்லாமல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாபச்சன் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தொடர்ந்து பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் அமிதாப்பச்சன்.
அபிஷேக் -ஐஸ்வர்யா ராய் ஜோடி: 83 வயதை கடந்த நிலையிலும் அவரது இந்த எனர்ஜி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களுக்கும் மிகப் பெரிய அளவில் உத்வேகத்தை கொடுத்து வருகிறது, இந்நிலையில் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது மனைவியும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பிரிய உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் இருவருமே அது குறித்து மௌனம் கலைக்கவில்லை. ஆயினும் சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
அமிதாப் & அபிஷேக் வாங்கிய அப்பார்ட்மெண்ட்கள்: இதனிடையே, தன்னுடைய அப்பா அமிதாப்பச்சனுடன் இணைந்து மும்பையின் முலுண்ட் பகுதியில் 10 அப்பார்ட்மெண்ட்களை 24.95 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அபிஷேக் பச்சன் வாங்கி போட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவருமே நிலத்தில் தங்களது பணத்தை இன்வெஸ்ட் செய்யவே விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் ஐஸ்வர்யா ராயும் அதிகமான சொத்துக்களை கொண்ட இந்திய பிரபலங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ள நிலையில் அமிதாபச்சன், அபிஷேக் பச்சன் என அவர்கள் குடும்பத்தினர் அனைவருமே அதிகமான சொத்துக்களை கொண்டவர்களாக உள்ளனர்.
வீடுகளை வாங்க ஆர்வம்: முன்னதாக அமிதாப்பிற்கு மும்பையில் ஏகப்பட்ட சொத்துக்கள் காணப்படுகின்றன. இதில் பிரதிக்ஷா, ஜல்சா என இரண்டு பிரம்மாண்ட பங்களாக்களும் உள்ளன. இதனிடையே, சமீப காலங்களில் அமிதாப் மற்றும் அபிஷேக் இருவரும் வீடுகள் வாங்கி குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓபராய் ரியால்டியின் ஓபராய் எபர்னியா குடியிருப்பில்தான் இவர்கள் 10 அப்பார்ட்மெண்ட்களை வாங்கியுள்ளனர். கடந்த 9ம் தேதி இதன் பத்திரப்பதிவு நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் அபிஷேக் 6 வீடுகளும் அமிதாப் 4 வீடுகளும் வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில்தான் அபிஷேக் பச்சன், ஜூஹு பகுதியில் 15 கோடிகளுக்கு 6 அப்பார்ட்மெண்ட்கள் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











