விஜய்சேதுபதி மைண்ட் வாய்ஸ்.. நயன்தாராவ இல்ல இனி ஈஸியா தீபிகா படுகோனையே கடத்தலாம்!
Recommended Video
சென்னை: விஜய்சேதுபதி, விஜய்தேவரகொண்டா, ஆயுஷ்மான் குரானா, மனோஜ் பாஜ்பாய், ஆலியா பட், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், பார்வதி ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நடிகர்கள் திடீரென சந்திக்க என்ன காரணம் என பலரும் சிந்தித்து வரும் வேளையில், சமீபத்தில் ஆஸ்கருக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படங்களில் நடித்தவர்கள் இவர்கள் என்ற சம்மந்தம் விடையாக கிடைத்துள்ளது.

பாலிவுட், கோலிவுட் மற்றும் மலையாள திரை நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து ஃபிலிம் கம்பேனியன் நடத்திய வட்டமேசை மாநாட்டில் சினிமா குறித்து நடத்திய கலந்துரையாடலுக்கு பிறகு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம் நாளை வெளிவரும் நிலையில், இப்படியொரு புகைப்படம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ், விஜய் தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட், ரன்வீர் சிங் - ஆலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய், பார்வதி நடிப்பில் வெளியான உயரே, ஆயுஷ்மான் குரானாவின் அந்தாதுன் தீபிகா படுகோனின் பத்மாவத் என கடந்த ஆண்டு இந்திய திரைத்துறையை கலக்கிய ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்து திரைத்துறைக்கான கலந்தாலோசனையை நடத்தியுள்ளது வேறு ஒரு பெரிய விஷயத்திற்காகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை வெயிட் பண்ணுவோம்.
நானும் ரவுடி தான் படத்திற்கு முன்பே நயன்தாராவை கடத்தணும்னு சொன்ன விஜய்சேதுபதி, பக்கத்துல இப்போ தீபிகா படுகோனே இருக்காங்க உஷாரா இருந்துக்கோங்க ரன்வீர் சிங்.


Click it and Unblock the Notifications











