திடீரென இந்தியில் மட்டும் ட்வீட்.. பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நடந்த மாற்றம்.. என்ன ஆகப் போகிறதோ?

மும்பை: இந்தி தான் தேசிய மொழி என நடிகர் அஜய் தேவ்கன் சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இன்று திடீரென பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் தங்கள் வாழ்த்து ட்வீட்களை வெறும் இந்தியில் மட்டுமே போட்டு வருகின்றனர்.

இதுவரை ஆங்கிலத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் பதிவுகளை போட்டு வந்தவர்கள் இப்படி அதிரடியாக மாறியது ஏன்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

பாஜக தலைவர் அமித்ஷா இந்தி தான் தேசிய மொழி என சமீபத்தில் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்கள் பலரும் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பா. ரஞ்சித் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் தமிழ் தான் இணைப்பு மொழி எனக் கூறினர்.

அஜய் தேவ்கன் ஆத்திரம்

அஜய் தேவ்கன் ஆத்திரம்

நடிகர் கிச்சா சுதீப் பெங்களூருவில் நடந்த சினிமா விழாவில் கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றியை பாராட்டிய போது, இந்தி தேசிய மொழி இல்லை எனக் கூறினார். அவரது பேச்சுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆத்திரத்தோடு பதில் அளித்திருந்தார் அஜய் தேவ்கன். இந்தி தேசிய மொழி இல்லை என்றால், உங்கள் தாய் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுறீங்க எனக் கேட்டு இருந்தார்.

அடிவாங்கிய அஜய்தேவ்கன் படம்

அடிவாங்கிய அஜய்தேவ்கன் படம்

அஜய் தேவ்கனின் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், அஜய் தேவ்கன் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த ரன்வே 34 திரைப்படம் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்த ஹீரோபன்டி 2 திரைப்படம் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அடி வாங்கியது. 3வது வாரத்திலும் கேஜிஎஃப் 2 மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி இந்தி பெல்ட்டில் மட்டும் 400 கோடி ரூபாய் வசூலையும் ஒட்டுமொத்தமாக 1050 கோடி வசூலையும் அள்ளி உள்ளது.

Recommended Video

Varsha Bollamma Speech | SelfieMovie | Selfie Crew | Filmibeat Tamil
இந்தியில் வாழ்த்திய அக்ஷய் குமார்

இந்தியில் வாழ்த்திய அக்ஷய் குமார்

இந்நிலையில், ரம்ஜான் வாழ்த்துக்களை வெறும் இந்தியில் மட்டுமே பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பதிவிட்டுள்ளார். அவர் மட்டுமின்றி வேறு சில பாலிவுட் நடிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை இந்தியில் பதிவிட ஆரம்பித்துள்ளது தான் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுவரை ஆங்கிலத்தில் இந்தியா மட்டுமின்றி உலகளவில் தங்களுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இந்த நடிகர் வாழ்த்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெனிலியா கணவர்

ஜெனிலியா கணவர்

நடிகை ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷ் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பரசுராமர் ஜெயந்தி மற்றும் அக்‌ஷய த்ரிதியை வாழ்த்துக்களை வெறும் இந்தியில் மட்டுமே ட்வீட் செய்துள்ளார். ஆனால், அவர் அதன் பின்னர் ரம்ஜான் வாழ்த்துக்களை ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் எந்த வாழ்த்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X