தலைக்கு மேலே கால தூக்கி யோகா..ஆஷ்கா கோரதியாவின் வைரல் பிக்ஸ்!
மும்பை : எப்போதும் யோகாவில் தரிசனம் கொடுக்கும் ஆஷ்கா கோரதியா கால் முழுவதும் தெரியும்படி ஒற்றை காலை கழுத்திற்கு மேல் தூக்கி யோகா செய்து அசத்தும் புகைப்படங்களும் வைரல் தான்.
நடிகர், நடிகைகள் அனைவரும் இந்த லாக்டவுனில் படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தினால் தங்களின் நேரத்தை அவர்களது ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் நடுக்கடலில் பிகினி உடையில் ஊஞ்சல் ஆடிவந்த க்ளிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த இவர் இப்போது யோகா செய்து வந்த புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களுக்கு செம்ம தீனி போட்டுள்ளார். சமீபத்தில் வெளியிட்ட பிகினி போட்டோ செம்ம வைரல் தான்.

நல்ல பெயர்
ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்த இவர் பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வந்துள்ளார். இதில் இவர் குமுட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த "க்குசும்" என்ற டிவி தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர். குமுட் என்ற கதாபாத்திரம் இவருக்கு அளவில்லாத நற்பெயரை பெற்றுத்தந்தது. கலர்ஸ் தொலைக்காட்சியில் நாகின், நாகின் 2 போன்ற சீரியல்களிலும் பிரபலமானார்.

மக்களுக்கு அறிமுகம்
பல தொடர்களில் நடித்து வந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் தனக்கு விளம்பரம் தான் என்று நன்கு தெரிந்த இவர், அந்த வாய்ப்பை தவற விடாமல், 2012-ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 6-ல் இவரும் ஒரு பங்கேற்பாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் இவர் இன்னும் பல மக்களுக்கு அறிமுகமானார்.

காதல் கைகூடவில்லை
ஆஷ்கா கோரதியா மற்றும் டிவி நடிகர் ரோஹித் பஃக்சியை (Rohit bakshi) பத்தாண்டு காலமாக காதலித்து வந்த நிலையில் அந்த காதல் கைகூடவில்லை. ரோஹித் பாக்சியின் காதல் முறிவடைந்து வந்த நிலையில் 2017ம் ஆண்டு பிரின்ட் கோபெல்(BRENT GOBLE) என்ற அமெரிக்க தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிகினியில் ஊஞ்சல்
நடுக்கடலில் பச்சை நிற பிகினி உடையில் ஊஞ்சலில் ஒய்யாரமாய் ஆடியவாறு இவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் இப்போது ரசிகர்களிடையே புயல் காற்றை போல சுழன்று சுழன்று அடித்து வருகிறது. இப்படி ஒரு ஹாட்டான படத்தை பார்த்த அவர்கள் ஆஷ்காவை கொஞ்சியும் கெஞ்சியும் வருகின்றனர். பெரும்பாலும் கவர்ச்சியான, விதவிதமான பிகினியிலேயே தென்படுகிறார் ஆஷ்கா.

கவர்ச்சியுடன் கருத்து
பிகினி அலையே இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத நிலையில் இவர் இப்போது ஒரு யோகா செய்யும் படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை நிற உடையில் கால் முழுவதும் தெரியும்படி ஒற்றை காலை கழுத்திற்கு மேல் தூக்கி யோகா செய்து வாழ்க்கையில் செல்ப் கண்ட்ரோல் இல்லாமல் சந்தோசம் இல்லை என ரசிகர்களுக்கு கவர்ச்சியுடன் கருத்தையும் கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் இவரை யோகா குரு என அழைத்து வருகின்றனர்.
Recommended Video

கட்டுகோப்பான உடல்
யோகா புகைப்படத்தை பார்த்த ஒரு சிலர் இது முற்றிலும் அழகாக உள்ளது என்றும் கூறிவருகின்றனர். வித விதமான யோகா போஸ்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனது ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். தனது உடல் கட்டுகோப்பாக இருப்பதற்கு யோகாதான் முக்கிய காரணம் என்றும் அவர் கூறிவருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . யோகாசனம் அனைத்தையும் முடித்துவிட்டு அழகான உடையில் போட்டோஷூட்ஸ் நடத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











