முருகதாஸ் இயக்கும் விஜய் 62... தளபதியோடு டூயட் பாடும் இரண்டாவது ஹீரோயின்!
சென்னை : முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கவிருக்கிறாராம்.
விஜய்யின் 'மெர்சல்' படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
'மெர்சல்' படத்தை அடுத்து தனது 62-வது படத்தில் முருகதாஸுடன் இணைகிறார் விஜய். இந்தத் தகவல் இரண்டு மாதங்களுக்கு முன்பே உறுதியானது குறிப்பிடத்தக்கது.

முருகதாஸ் படம்
விஜய் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். மகேஷ்பாபு நடிப்பில் 'ஸ்பைடர்' படத்தை இயக்கிய அவர் மீண்டும் விஜய் 62 படத்தை இயக்கத் தயாராகி வருகிறார்.

சமூக நோக்கமுள்ள கதை
இந்தப் படமும் விஜய் - முருகதாஸ் கூட்டணியின் உருவான முந்தைய படங்களைப்போன்று சமூக நோக்கமுள்ள ஒரு கதையில் தயாராகவிருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்குகிறது.

ரகுல் ப்ரீத் சிங்
விஜய்யின் இந்தப் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக 'ஸ்பைடர்' நாயகி ரகுல் பிரீத் சிங் நடிக்கவிருப்பது ஏற்கனவே முடிவாகி விட்ட நிலையில், தற்போது இன்னொரு நாயகியாக இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கவிருக்கிறாராம்.

சோனாக்ஷி சின்ஹா
சோனாக்ஷி சின்ஹா, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'லிங்கா' படத்தில் நாயகியாக நடித்தவர். அதோடு ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கிய 'அகிரா' படத்திலும் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











