கொரோனாவிலிருந்து மீண்ட காதல் ஜோடி… ஹாயாக மாலத்தீவு பறந்தனர் !
சென்னை : பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடிகளான ரன்பீர் கபூர் ஆலியா பட் மாலத்தீவு சென்றுள்ளனர்.
பாலிவுட் முன்னணி நடிகர்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர்.

ஆலியா
கொரோனாவின் இரண்டாம் அலையில் பாலிவுட் பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 2ம் தேதி தெரிய வந்தது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். குவாரன்டைனில் இருந்தபோது அவ்வப்போது செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார்.

பயணம்
இந்நிலையில் தனக்கு நெகட்டிவ் என வந்துவிட்டதாக கடந்த 15ம் தேதி தெரிவித்தார் ஆலியா. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமான வேகத்தில் தன் காதலரான நடிகர் ரன்பீர் கபூருடன் மாலத்தீவுகளுக்கு கிளம்பிவிட்டார். ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மாலத்தீவு புறப்பட்டனர்
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் ஒருவாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் மாலத்தீவுகளுக்கு கிளம்பியிருக்கின்றனர். இவர்கள் இருவரும் விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video

குணமடைந்தார்
முன்னதாக ரன்பிர் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். ரன்பிருக்கு முன்பு அவரின் அம்மாவும், நடிகையுமான நீத்து கபூருக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டது. கெரியரை பொறுத்த வரை ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ஜூலை மாதம் 30ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. மேலும் ராஜமவுலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











