ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட்..என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஆலியா பட்டின் ரியாக்ஷன்!
மும்பை : பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட் குறித்து ஆலியா பட் கூறியுள்ள தகவல் இணையத்தை பரபரப்பாக்கி உள்ளது.
ரன்வீர் சிங்கின் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் 83 திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. கடந்த 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இதில் அப்போதைய இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரன்வீர் சிங். அவரது மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்திருந்தார்.

ரன்வீர் சிங்
கபில் தேவ் போன்றே தோற்றத்தையும் மாற்றி சிறப்பாக நடித்திருந்த ரன்வீர் சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. இதையடுத்து ஏராளமான படங்களில் நடித்து வரும் ரன்வீர் சிங், இயக்குனர் ஷங்கர் உடனும் ஒரு படத்தில் பணியாற்ற உள்ளார். அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் தான் ரன்வீர் கபூர் நாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிப்பு தொடங்க உள்ளது.

நிர்வாணமாக போஸ்
நடிப்பை தாண்டி மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் ரன்வீர் சிங், வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது எனஅவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது ரன்வீர் பத்திரிகை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். ரன்பீரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளப்பி ரன்பீர் சிங்கை கண்டபடி திட்டி வருகின்றனர்.

தீபிகா ஆதரவு
மேலும், ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோனே நிர்வான போட்டோஷூட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த புகைப்படம் பத்திரிக்கையில் வெளியாகும் முன்பே நான் பார்த்துவிட்டேன் எனக்கு பிடித்திருந்தது. ரன்வீர் எப்போதும் வித்தியாசமாக எதையாவது முயற்சித்து பார்க்க வேண்டும் என்று விரும்புவார் அவருக்கு எப்போதும் நான் துணையாக இருப்பேன் என்று கூறியிருந்தார்.

ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இந்நிலையில், ஆலியா பட் நடித்துள்ள டார்லிங்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆலியாவிடம், ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆலியா, தனக்கு பிடித்த சக நடிகருக்கு எதிராக நான் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். ஆனால், எனக்கு பிடித்த சக நடிகரான ரன்வீரைப் பற்றி வரும் எதிர்மறையான கருத்துக்கள் எனக்குப் பிடிக்கவில்லை. எனவே அந்தக் கேள்வியை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை என்று ஆலியா பட்பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











