twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னைக்கு ஐ லவ் யூ சொன்ன பாலிவுட் நடிகை: அப்படியே அந்த ரசம் சாதத்துக்கும் ஒரு மிஸ் யூ போடுங்க

    |

    சென்னை: தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள 'லைகர்' திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது.

    விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் அனன்யா பாண்டே நாயகியாக நடித்துள்ளார்.

    'லைகர்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த அனன்யா பாண்டே, அதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

    சோகத்திலிருந்து மீண்டு வந்த நடிகை மீனா.. சுதந்திர தினத்திற்கு வாழ்த்து.. ரசிகர்கள் உற்சாகம்! சோகத்திலிருந்து மீண்டு வந்த நடிகை மீனா.. சுதந்திர தினத்திற்கு வாழ்த்து.. ரசிகர்கள் உற்சாகம்!

    பாலிவுட் ஹாட் சாக்லேட்

    பாலிவுட் ஹாட் சாக்லேட்

    இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் அனன்யா பாண்டே. ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2' படம் மூலம் அறிமுகமான அவர், அடுத்ததாக ‘Pati Patni Aur Won', ‘Khaali Peeli', ‘Gehraiyaan' ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார். பாலிவுட் ரசிகர்களின் ஹாட் சாக்லேட்டாக கலக்கி வந்த அனன்யா பாண்டே, தற்போது தெலுங்கு சினிமாவிலும் தடம் பதித்துள்ளார்.

    விஜய் தேவரகொண்டாவுடன் டூயட்

    விஜய் தேவரகொண்டாவுடன் டூயட்

    பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்துவரும் படம் ‘லைகர்.' ஸ்போர்ட்ஸ் ஜானரில் பிரமாண்டமான ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து இதுவரை வெளியாகியுள்ள பாடல்களில், அனன்யா பாண்டே தாரளமாக கவர்ச்சிக் காட்டியுள்ளது, ரசிகர்களை பயங்கரமாக சூடேற்றியுள்ளது.

    நெட்டிசன்களை விளாசிய அனன்யா

    நெட்டிசன்களை விளாசிய அனன்யா

    கடந்த சில நாட்களாக 'லைகர்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் அனன்யா பாண்டே. அப்போது குறிப்பிட்ட நடிகர்கள், அவர்களது படங்கள் பாய்காட் செய்யப்படுவது குறித்து ரொம்பவே காட்டமாக பேசியிருந்தார். நெட்டிசன்கள் எல்லாவற்றையும் சர்ச்சையாக்குவது ஏன் என புரியவில்லை எனவும், இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லையென்றும் தெரிவித்திருந்தார்.

    Recommended Video

    Iswarya Menon | Cameraman ராஜசேகர் என்னை ரொம்ப அழகா காட்டி இருக்கிறார் | *INTERVIEW
    சென்னைக்கு ஐ லவ் யூ

    சென்னைக்கு ஐ லவ் யூ

    இந்நிலையில், பஞ்சாப்பில் லைகர் ப்ரோமோஷனுக்காக சென்றிருந்த அனன்யா பாண்டேவை, விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி அட்ராசிட்டி செய்த போட்டோக்கள் வைரலாகின. அதனைத் தொடர்ந்து சென்னை வந்திருந்த அவர், லைகர் படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாக இருந்தார். அதுகுறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அனன்யா பாண்டே, "என்னை அன்பால் நிரப்பிய சென்னையே, நான் உன்னை காதலிக்கிறேன்..." என தெரிவித்துள்ளார். அதோடு, அந்த ‘ரசம் சாதம்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Bollywood actress Ananya Panday says I love you to Chennai and Rasam Sadham
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X