தங்கமாய் ஜொலிக்கும் தீபிகா படுகோனோ..லேட்டஸ்ட் போட்டோசூட் !
மும்பை : நடிகை தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கம் போல் ஜிகுஜிகுனு ஜொலிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இவர் 2018ம் ஆண்டு பிரபல நடிகர் ரன்வீர்சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தீபிகா படுகோனே இந்தி படத்துறையில் நடிகையாகவும் , தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

கன்னட படத்தில்
பெங்களுரில் பிறந்து வளர்ந்த தீபிகா படுகோனே, 2006ம் ஆண்டு முதன் முறையாக ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். பின்னர் 2007ம் ஆண்டு பாரா கானின் ஓம் ஷாச்தி ஓம் என்ற இந்தி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமானார்.

ரன்வீர் சிங் கபில்தேவாக
பல திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை நடிப்பிற்காக இவர், கா என்ற ப்ரொடக்சன் ஹவுஸை ஆரம்பித்து முதல் படமா "சப்பக்" என்ற படத்தை தயாரித்தார். தற்போது "83" என்ற படத்தை தயாரிக்கிறார் இது கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வழக்கை வரலாற்றை பற்றிய திரைப்படமாகும். இப்படத்தில், ரன்வீர் சிங் கபில் தேவாகவும், தமிழ் நடிகர் ஜீவா ஸ்ரீகாந்தாகவும் நடித்துள்ளனர். மேலும் இதில் தீபிகா, கபில் தேவின் மனைவியா நடித்து வருகிறார்.

பிடித்தமான ஜோடி
பத்மாவதி, ராம் லீலா, பஜிராவோ மஸ்தானி போன்ற வெற்றி படங்களில் ரீல் ஜோடியாக நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. பலருக்கு பிடித்த ஒரு ஜோடியாகவும் இன்று வரை மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளனர்.

ஜிகுஜிகுனு
சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது, தங்க நிறத்தில் சும்மா ஜிகுஜிகு ஜொலிக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். போதுவாக இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதற்கு கண்ணை மூடிக்கொண்டு லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு இதயங்களை பரிசளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











