twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘இந்தியன் 2‘வில் கமல்ஹாசனுக்கு ஜோடி இவரா?..ஷங்கர் போட்ட மாஸ்டர் பிளான்!

    |

    சென்னை : , 'இந்தியன் 2' படத்தில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது, அதன்பின் இன்று வரை தொடங்கப்படவில்லை.

    இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் மற்றும் கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சுகன்யா, சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    குடும்பத்துடன் செட்டில் ஆன காஜல் அகர்வால்.. இந்தியன் 2 படத்தில் அவருக்கு பதில் யார் தெரியுமா? குடும்பத்துடன் செட்டில் ஆன காஜல் அகர்வால்.. இந்தியன் 2 படத்தில் அவருக்கு பதில் யார் தெரியுமா?

    இந்தியன்

    இந்தியன்

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இத்திரைப்படத்தில் அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் கமல் நடித்து அசத்தி இருந்தார். குறிப்பாக அவர் இந்தியன் தாத்தாவாக வந்த சேனாபதி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது.

    கிரேன் விபத்து

    கிரேன் விபத்து

    இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புடன் தொடங்கியது. கிட்டத்தட்ட 60 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்திருந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு இன்று வரை தொடங்கப்படவில்லை. இதையடுத்து, இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் நீதிமன்றம் சென்றதால் இப்படம் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

    இந்தியன் 2

    இந்தியன் 2

    கமலின் விக்ரம் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டதால், இந்தியன் 2 படத்தை எடுக்க லைகா நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அவர் திருமணம் செய்து கொண்டு குழந்தையை பெற்று ஒய்வில் இருக்கிறார். இதனால், உலகநாயகனுக்கு ஜோடியாக டாப்மோஸ்ட் ஹீரோயினை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    தீபிகா படுகோனே ஜோடியா?

    தீபிகா படுகோனே ஜோடியா?

    அதன்படி, 'இந்தியன் 2' படத்தின் கதாநாயகியாக இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும், அவர் 22 கோடி சம்பளம் கேட்டதாகவும் அந்த சம்பளத்தை தர லைகா புரொடக்ஷன்ஸ் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தீபிகா படுகோனே தற்போது நாக் அஸ்வின் இயக்கும் 'ப்ராஜெக்ட் கே' படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    English summary
    indian 2 latest update bollywood actress Deepika Padukone pair with kamal haasan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X