ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட்..மனைவி தீபிகா படுகோனே பதில் என்ன தெரியுமா?

மும்பை : பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட் குறித்து தீபிகா படுகோனே கூறியுள்ள தகவல் இணையத்தை பரபரப்பாக்கி உள்ளது.

ரன்வீர் சிங்கின் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் 83 திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. கடந்த 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இதில் அப்போதைய இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரன்வீர் சிங். அவரது மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்திருந்தார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

கபில் தேவ் போன்றே தோற்றத்தையும் மாற்றி சிறப்பாக நடித்திருந்த ரன்வீர் சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. இதையடுத்து ஏராளமான படங்களில் நடித்து வரும் ரன்வீர் சிங், இயக்குநர் ஷங்கர் உடனும் ஒரு படத்தில் பணியாற்ற உள்ளார். அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் தான் ரன்வீர் கபூர் நாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிப்பு தொடங்க உள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

நடிப்பை தாண்டி மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் ரன்வீர் சிங், வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது எனஅவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது இவர் நடத்தி உள்ள போட்டோஷூட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

நிர்வாணமாக போஸ்

நிர்வாணமாக போஸ்

பத்திரிகை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். மறைந்த அமெரிக்க நடிகர் பெர்ண்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரன்வீர் இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளாராம். பெர்ண்ட் ரெனால்ட்ஸும் இவ்வாறு நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். அவரைப் போன்றே தற்போது ரன்வீரும் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

துணையாக இருப்பேன்

துணையாக இருப்பேன்

ரன்வீரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி ரன்பீர் சிங்கை கண்டபடி திட்டி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அவரது மனைவி தீபிகா படுகோனேவிடம் கேட்டபோது, இந்த கான்செப்ட் குறித்து ரன்வீர் என்னிடம் சொன்னார் இது ஏதோ வித்தியாசமான கான்செப்ட் என்பதால் நான் ஆர்வமாகவே இருந்தேன். இந்த புகைப்படம் பத்திரிக்கையில் வெளியாகும் முன்பே நான் பார்த்துவிட்டேன் எனக்கு பிடித்திருந்தது. ரன்வீர் எப்போதும் வித்தியாசமாக எதையாவது முயற்சித்து பார்க்க வேண்டும் என்று விரும்புவார் அவருக்கு எப்போதும் நான் துணையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X