மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. குழந்தையுடன் புதிதாக வாங்கிய வீட்டிற்கு சென்ற தீபிகா படுகோன்!

சென்னை: நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். கடந்த ஆண்டிலேயே ஷாருக்கானுடன் பதான், ஜவான் என இரு படங்களில் நடித்திருந்தார். இந்த ஆண்டில் கல்கி 2898 ஏடி படத்திலும் தீபிகா படுகோன் நடித்திருந்தார்.

ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துக் கொண்ட இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய கர்ப்பத்தை அறிவித்திருந்தார். தொடர்ந்து கர்ப்பத்துடனேயே கல்கி 2898 ஏடி படத்தின் பிரமோஷன்களிலும் கலந்துக் கொண்டார். இவர் இந்த பிரமோஷனின்போது ஹீல்ஸ் போட்டுக் கொண்டு வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

deepika padukone ranveer singh

நடிகை தீபிகா படுகோன்: நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டின் மிகப்பெரிய நாயகியாக தொடர்ந்து ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர். பல ஆண்டுகளை கடந்து இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமானவரான இவர் கோச்சடையான் படத்தின்மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தின் தமிழ் வெர்ஷனிலும் இவரை பார்க்க முடிந்தது. இந்நிலையில் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானதை அறிவித்திருந்தார்.

deepika padukone ranveer singh

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்: ரன்வீர் சிங்குடன் தன்னுடைய கர்ப்பகால போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் தீபிகா படுகோன். தன்னுடைய கர்ப்பத்துடனேயே கல்கி படத்தின் பிரமோஷன்களில் தீபிகா கலந்துக் கொண்ட நிலையில், இவர் ஹீல்ஸ் செருப்புடன் வந்தது விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி இவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் தீபிகா படுகோன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய குழந்தையுடன் அலிபாக்கில் புதிதாக வாங்கியுள்ள பங்களாவிற்கு இந்த ஜோடி சென்றுள்ளது.

வீடு திரும்பினார் தீபிகா படுகோன்: முன்னதாக ரன்வீர் சிங்கின் அப்பா, அம்மா மற்றும் சகோதரி என அனைவரும் தீபிகாவை மருத்துவமனையில் சென்று பார்த்துள்ளார்.முன்னதாக நடிகர் ஷாருக்கான், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டவர்களும் மருத்துவமனைக்கு சென்று தீபிகா படுகோனை நலம் விசாரித்துள்ளனர். இந்நிலையில் தற்போது 22 கோடி ரூபாய்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கியுள்ள அலிபாக் பங்களாவிற்கு இந்த ஜோடி சென்றுள்ளது. இந்த பகுதியில் அமிதாப் பச்சன் , விராட் கோலி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பலரும் வீடுகளை வாங்கியுள்ளனர். மிகவும் அமைதியான சூழ்நிலையில் இந்தப்பகுதி இருக்கும் நிலையில், தன்னுடைய குழந்தையுடன் அங்கு தீபிகா நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளார்.

deepika padukone ranveer singh

தீபிகா படுகோன் பிளான்: சில மாதங்கள் தொடர்ந்து நடிப்பிலிருந்து விலகி தன்னுடைய குழந்தையுடன் நேரம் செலவழிக்க தீபிகா படுகோன் திட்டமிட்டுள்ள நிலையில், இதையடுத்து கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாவது பாகம் உள்ளிட்ட படங்களில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப அவர் தன்னை தயார்ப்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X