Jawan: கெஸ்ட் ரோலில் நடிக்க கோடியில் சம்பளம் வாங்கிய தீபிகா படுகோனே.. அப்படி என்ன ரோலா இருக்கும்!

சென்னை: Deepika Padukone Salary (தீபிகா படுகோனே சம்பளம்) ஜவான் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க நடிகை தீபிகா படுகோனே கோடியில் சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷாருக்கானின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ந் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் வில்லனாக விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

Bollywood actress Deepika Padukone Salary for Guest Role in Jawan

ஜவான்: மூன்று வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் இருந்து வெளியான டிரைலர் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டினாலும், இப்படம் விஜயகாந்த் நடித்த பேரரசு திரைப்படத்தின் காபி என்ற செய்தி இணையத்தில் பரவிவருகிறது.

முதல் பாடல்: ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பில் ஷாருக்கானும், அவரது மனைவி கெளரி கானும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், ஜவான் படத்தின் முதல் பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகி உள்ள இப்பாடலை தமிழில் அனிருத் தான் பாடி உள்ளார். ஜவான் படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமாகி உள்ளார். வந்த இடம் என தொடங்கும் இப்பாடல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

Bollywood actress Deepika Padukone Salary for Guest Role in Jawan

பல கோடி சம்பளம்: இந்நிலையில், ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த தீபிகா படுகோனேவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் கேமியோ கதாபாத்திரத்திற்கு 17 முதல் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக தெரிகிறது. ஹீரோயினாக நடித்துள்ள நயன்தாராவே 11 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில் தீபிகாவிற்கு பல கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்படி என்ன முக்கியமான ரோல் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

பிளாஷ் பேக்: இப்படத்தில் ஷாருக்கான் அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரம் படத்தின் பிளாஷ் பேக் காட்சியில் வரும் மிக முக்கியமாக கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X