Disha patani: கங்குவா படத்தின் நாயகி திஷா பதானி புலம்பல்.. என்ன இப்படி ஆகிப் போச்சு!

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் கங்குவா. வரலாற்று பின்னணியில் படத்தின் கதைக்களம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகள் மற்றும் சென்னையில் அடுத்தடுத்து நடத்தப்பட்டது.

இந்நிலையில் விரைவில் வெளிநாட்டிலும் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bollywood Actress Disha patani seems to be upset on Kanguva movie

சூர்யாவின் கங்குவா பட நாயகி திஷா பதானி புலம்பல்: நடிகர் சூர்யா -இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வருகிறது கங்குவா படம். இந்தப் படத்தின் போஸ்டர்கள், ப்ரமோ என சூர்யாவின் பிறந்தநாளில் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக இம்ப்ரஸ் செய்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகள் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் வெளிநாட்டிற்கும் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் செல்லவுள்ளனர்.

1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போதைய காலகட்டத்தை ஒட்டியும் ஒரு போர்ஷன் அமைந்துள்ளது. இருவேறு கெட்டப்புகளில் இந்தப் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். தற்போதைய காலகட்டத்தின் போர்ஷன்கள் கோவாவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு முன்னதாக எடுத்து முடிக்கப்பட்டது. இந்த போர்ஷன்களில் படத்தின் நாயகி திஷா பதானியும் பங்கேற்றிருந்தார்.

படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துவரும் சூழலில் கோவாவில் சூர்யா மற்றும் திஷா பதானியின் டூயட்டும் படமாக்கப்பட்டது. இந்நிலையில் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில், படத்தின் வரலாற்று கதைக்களத்திற்கான போர்ஷன்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா மிரட்டும் இந்த காட்சிகளுக்காக அவர் அதிகமான மெனக்கெடலுடன் நடித்துள்ளதாக படத்தின் இயக்குநர் சிவா முன்னதாக தன்னுடைய பேட்டியில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

பான் இந்தியா படமாக 10 மொழிகளில் கங்குவா ரிலீசாகவுள்ளது. இதையொட்டி பாலிவுட் நாயகி திஷா பதானி இந்தப் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் தற்போதைய போர்ஷனில் திஷா பதானி, ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பதால், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய ப்ரேக்கை தென்னிந்திய அளவில் ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற கனவுடன் அவர் இருந்த நிலையில், தற்போது கங்குவா படம் குறித்து திஷா பதானி மிகவும் அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் தற்போதைய காலகட்டத்திற்கான காட்சிகள் அதிகமாக இருப்பதாகவே முன்னதாக படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது. இதையொட்டி திஷாவிற்கும் அதிகமான போர்ஷன்கள் அமைந்திருந்தது. ஆனால் படம் துவங்கிய பின்பு, வரலாற்று கதைக்களத்தின் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கோவாவில் முன்னதாக எடுக்கப்பட்ட 5 நாட்கள் சூட்டிங்கோடு, திஷா பதானியின் போர்ஷன்கள் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

மொத்தமாக 5 நாட்கள் மட்டுமே திஷா பதானி காட்சிகளின் சூட்டிங் எடுக்கப்பட்ட நிலையில், அவரது காட்சிகள் படத்தில் மிகவும் குறைவாகவே இருக்க சாத்தியம் உள்ளது. இதனால் கங்குவா படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் தனக்கான ஒரு மார்க்கெட்டை பிடிக்க மிகவும் ஆவலுடன் இருந்த திஷாவிற்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் மிகுந்த அப்செட்டில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X