சினிமாவை மிஞ்சும்படி ரொமான்டிக்காக காதலை சொன்ன டாக்டர்.. டக்கென ஓகே சொன்ன 'சாஹோ' பட நடிகை!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவரை காதலிப்பதை பாலிவுட் நடிகை எவிலின் ஷர்மா ஒப்புக்கொண்டுள்ளார்.
மும்பை: பாலிவுட் நடிகை எவிலின் ஷர்மா தான் காதலில் விழுந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஏ ஜவானி ஹய் தீவானி, கத்தார், ஜாக் அண்ட் தில் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்திருப்பவர் எவிலின் ஷர்மா. இவர் சமீபத்தில் வெளியான பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவரை காதலிப்பதை எவிலின் ஷர்மா ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், துஷான் பிந்தி என்பவரை தான் காதலிப்பதாகக் கூறியுள்ளார்.

சினிமா பாணியில்
இதுகுறித்து அவர் மேலும் , "கனவு நனவான தருணம் அது. துஷானுக்கு என்னை நன்றாக தெரியும், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒருநாள் மாலை துஷான் என்னிடம் காதலை சொன்னார். ஒரு கிட்டாரிஸ்டை வரவழைத்து எனக்கு பிடித்த பாடலை வாசிக்க செய்து, என் முன்னே மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தினார். என்னால் மறுக்க முடியவில்லை", என்றார்.
திருமணம் எப்போது?
துஷானும், எவிலினும் தற்போதைக்கு காதலர்களாக இருக்கவே முடிவு செய்துள்ளனர். திருமணம் குறித்து அவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்து முடிவு செய்த பிறகு தனியாக அறிவிப்போம் என எவிலின் தெரிவித்துள்ளார். துஷானுக்கு முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தையும் எவிலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிட்னியில் செட்டிலாக பிளான்
ஆனால் திருமணத்துக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகவே இருவரும் முடிவு செய்துள்ளனர். ஏனென்றால் எவிலினுக்கு மிகவும் பிடித்த ஊர் சிட்னியாம். இருப்பினும் இந்தியாவிலும் தங்களுடைய இருப்பை உறுதி செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

எவிலின் படங்கள்
எவிலின் ஒரு பாதி இந்தியர், பாதி ஜெர்மானியர். தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர் நடித்த ஏ ஜவானி ஹய் தீவானி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் எவிலின் பிரபலமானார். அதன் பிறகு நிறைய படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











