பிரபல இந்தி நடிகை திடீர் மரணம்.. 80களில் மிரட்டியவர்.. அமிதாப் உட்பட உச்ச நடிகர்களுடன் நடித்தவர்!

மும்பை: பிரபல இந்தி நடிகை கீதா சித்தார்த் காக் உடல் நலக்குறைவால் காலமானார்.

நடிகை கீதா 1972ஆம் ஆண்டு வெளியான பரிட்சாய் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே பெரும் ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் கீதா.

தொடர்ந்து 1973ஆம் ஆண்டு வெளியான கரம் ஹவா என்ற படத்தின் மூலம் மேலும்பிரபலமானார். அந்தப் படத்தில் எம்எஸ் சத்யூஸ் என்ற அவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

கரம் ஹவா படம் தேசிய விருது பெற்றது. இதில் கீதாவின் கதாப்பாத்திரத்திற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 1970 மற்றும் 1980களில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

வேற லெவல்

வேற லெவல்

அவர் நடித்த ஷோலே, திரிஷல், டிஸ்கோ டான்ஸர, ராம் தெறி கங்கா மைலி, நூரி, தேஷ் பிரேமி, டான்ஸ் டான்ஸ், காசம் பைடா கர்னே வாலே, ஆர்த், மண்டி உள்ளிட்ட பல படங்கள் பாலிவுட் சினிமாவில் அவரை வேறலெவலுக்கு கொண்டு சென்றது.

ஆவணப்பட இயக்குநர்

ஆவணப்பட இயக்குநர்

படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தபோதே தொலைக்காட்சி தொகுப்பாளரும் தயாரிப்பாளரும் ஆவணப்பட இயக்குநருமான சித்தார்த் காக்கை திருமணம் செய்து கொண்டார். சித்தார்த் காக் பிரபலமான தொலைக்காட்சி கலாச்சார நிகழ்ச்சியான சுரபிக்கு பெயர் பெற்றவர்.

கலை இயக்குநர்

கலை இயக்குநர்

இந்த நிகழ்ச்சி 1990 முதல் 2001 வரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. கணவரின் இந்த நிகழ்ச்சியில் கலை இயக்குநராக பணியாற்றி வந்தார் கீதா.

இரங்கல்

இரங்கல்

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலை திடீரென உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கீதா நடிகை, கலை இயக்குநர் மட்டுமின்றி சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: passes away மரணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X