Janhvi Kapoor : பாவாடை தாவணியில் மயிலு மகள்.. காதலனுடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்!

திருப்பதி : பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது காதலனுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் மகள்

ஸ்ரீதேவியின் மகள்

1980களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கோலிவுட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து டாப் நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி அனைத்திலும் பல ஹிட்படங்களில் நடித்துள்ளார்.

அம்மாவைப்போல அழகு

அம்மாவைப்போல அழகு

இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆன நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். ஸ்ரீதேவி - போனி கபூரின் வாரிசான ஜான்வி கபூரும் தனது அம்மாவைப் போல பாலிவுட்டில் நடிகையாக கலக்கி வருகிறார். தனது அம்மாவைப்போல அனைத்து அழகும் இவரிடத்தில் கொட்டிகிடக்கிறது.

ஆறு படங்களில் நடித்துள்ளார்

ஆறு படங்களில் நடித்துள்ளார்

இந்தியில் 2018ம் ஆண்டு ரிலீஸான தடாக் திரைப்படம் மூலம் அறிமுகமான ஜான்வி, அடுத்தடுத்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, மிலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜான்வி கபூர் நடிப்பில் இதுவரை 6 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாகிறார். ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் ஜான்வி.

காதலருடன் சாமி தரிசனம்

காதலருடன் சாமி தரிசனம்

இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது சகோதரி குஷி கபூர் மற்றும் தனது ஆண் நண்பர் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இவருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகிகள் பிரசாதங்களை வழங்கினர். ஜான்வி கபூர் தனது ஆசைப்படி தெலுங்கு சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளது. அதேபோல் குஷிகபூர் தமிழில் மெகா ஹிட் அடித்த லவ்டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

நடிகரான ஷிகர் பஹாரியா மராட்டிய முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன் ஆவார். ஜான்வி கபூர் ஷிகர் இருவரும் காதலிப்பாகவும், பல இடங்களில் ஜோடியாக ஊர் சுற்றிவருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன. ஆனால், காதல் விவகாரம் குறித்து இருவரும் இதுவரை எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X