Janhvi kapoor: கியூட் சேலையில் அழகு தேவதையாக ஜான்வி கபூர்.. ஸ்தம்பித்த ரசிகர்கள்!

மும்பை: பாலிவுட்டில் நடிகை ஸ்ரீதேவி -போனி கபூர் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகையாக மாஸ் காட்டி வருகிறார்.

பாலிவுட் படங்களில் நடித்துவந்த ஜான்வி கபூர், தற்போது தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகியுள்ளார்.

தமிழிலும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள ஜான்வி கபூர், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

ஜான்வி கபூர்: நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய தந்தை போனிகபூர் தயாரிப்பிலும் நடித்துவரும் இவர் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க முன்னதாக விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா தெலுங்குப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் தமிழ் படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bollywood Actress Janhvi kapoors recent photoshoot pictures shared

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: பாலிவுட்டில் தடக் என்ற படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார் ஜான்வி கபூர். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஜான்வி கபூர், அடுத்தடுத்து ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தண்ணீரில் நனைந்தபடி அதிரடி சரவெடியாக போட்டோஷுட் எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கினார் ஜான்வி கபூர்.

கருப்புநிற தேவதை: இந்நிலையில் தற்போது கருப்பு நிற புடவையில் மிகவும் அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அழகான கண்ணாடி முன்பு தன்னுடைய கண்ணாடி போன்ற பளபளப்பான முகத்தை காட்டி, கண்ணாடியை கூச செய்துள்ளார் ஜான்வி கபூர். கண்ணாடியை போலவே ஜான்வியின் அழகின் முன்பு நிற்கமுடியாமல் ரசிகர்களும் ஓடி ஒளிந்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் வெளியான சில மணிநேரங்களில் 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளன.

அடுத்தடுத்த போட்டோஷுட்: இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த புகைப்பட சூட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ஜான்வி. இது மட்டுமில்லாமல் தன்னுடைய தங்கை குஷியுடன் தான் வெளியில் செல்லும் குறிப்பாக திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இத்தகைய இடங்களில் ஜான்வி மற்றும் குஷியை பாரம்பரிய உடைகளில் பார்க்க முடிகிறது. தன்னுடைய அம்மாவையும் அவ்வப்போது நினைவுகூர்ந்து அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜான்வி.

அடுத்தடுத்த படங்கள்: கடந்த 2018ம் ஆண்டில் தடக் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி தற்போது 5 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான குஞ்சன் சக்சேனா, ரூஹி போன்ற படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவைகளாக உள்ளன. கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்கான குட்லக் ஜெர்ரி என்ற படத்திலும் ஜான்வி நடித்துள்ளார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஜான்விக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X