‘தலைவி‘ல அப்படி… ‘தகாட்‘ ல இப்படி… படத்திற்காக மெனக்கெடும் கங்கணா ரனாவத் !
சென்னை : கங்கணா ரனாவத் தலைவி படத்தின் புகைப்படத்தையும் தகாட் படத்தின் படத்தையும் பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று இந்தியா முழுவதும் திறமையான நடிகையாக அறியப்பட்டவர் கங்கணா ரனாவத்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள படம் தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கி உள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். அவருடன் அரவிந்த்சாமி,மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பணிகள் முடிந்தன
தலைவி படத்தின் பணிகளை முடித்து தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. இதற்குத் தணிக்கை அதிகாரிகள் யு சான்றிதல் வழங்கி உள்ளார். இப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 கிலோ எடை கூடினார்
எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும், கருணாநிதியாக நாசரும், ஆர்.எம்வீரப்பனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், பாலிவுட் நடிகை கங்கணா, ஜெயலலிதா போல் தோன்றத்தைப் பெற சுமார் 20 கிலோ வரை எடை கூடி குண்டாக காணப்பட்டார்.

பாராட்டும் ரசிகர்கள்
இந்நிலையில் கங்கணா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். அதாவது தலைவி படத்தின் புகைப்படத்தையும், தற்போது நடித்து வரும் தகாட் படத்தின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் படத்திற்காக மெனக்கெடும் கங்கணாவின் ஆர்வத்தை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











