வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் கரீனா கபூர்!
மும்பை : பார்ப்பதற்கு வெண்ணெயில் புரட்டி எடுத்த பால்கோவாவை போன்று பளபளவென இருக்கும் கரீனா கபூர் இந்தியில் பிஸியாக நடித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.
சமீபத்தில் வெளியான குட் நியூஸ் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோ ஒன்று அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்த அழகான போட்டோவை பார்த்து பலரும் வர்ணித்து வரும் நிலையில் சிலர் இவரை கலாய்த்தும் வருகின்றர்.

தடைகளுக்கு பின்
ரெப்யுஜி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் நடித்த முதல் முதல்படமே பாக்ஸ் ஆபீஸில் வெளுத்துக் கட்டி வசூலை வாரியது. மேலும் இந்த படத்திற்கு முன் ஹிரித்திக் ரோஷனுடன் நடித்துவந்த படத்தில் அறிமுகமாக இருந்த நிலையில், பின் சில பல காரணங்களால் அந்த படத்தில் இருந்து வெளியேறி சில நாட்களுக்குப்பின் அபிஷேக் பச்சனுடன் சூப்பர் ஹிட் திரைப்படமான ரெப்யுஜி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்
அதற்குப் பின் நடித்த அடுத்தடுத்த படங்கள் வெற்றியடைய தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த இவர் ஷாருக்கான், சல்மான் கான் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அந்த படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

அக்சய் குமாருடன்
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரின் மகளான இவர் நடிகர் சயீப் அலி கானை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பாடிகார்ட், 3 இடியட்ஸ், பஜ்ரங்கி பைஜான் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் அக்சய் குமாருடன் நடித்து வெளியான குட் நியூஸ் திரைப்படத்தில் முற்றிலும் வித்தியாசமான கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

குட் நியூஸ்
அக்சய் குமார், தில்ஜித், கியாரா அத்வானி போன்றோருடன் இணைந்து சமீபத்தில் வெளியான குட் நியூஸ் திரைப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றியடைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முற்றிலும் காமெடி கலந்த கலகலப்பான கதைக்களத்தை கொண்ட இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய ஹிட்டானது.

அன்பை பகிருங்கள்
இந்நிலையில் தற்போது உள்ள லாக் டவுன் பிரச்சனையால் அனைவரும் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வரும் வேளையில் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் கவர்ச்சி ஏதுமில்லாமல் வெள்ளை நிற உடையில் கடற்கரையில் நின்றவாறு "அன்பை பகிருங்கள் என்றும் உறுதியாக இருங்கள் மேலும் பாதுகாப்பாக இருங்கள்" என பதிவின் தலைப்பில் பதிவிட்டிருந்தார்.

நேபோடிசம் ஆன் பீச்
அதைப் பார்த்த பலரும் இளவரசி பீச்சில் உள்ளது போல இருக்கிறது எனவும் தேவதை நேரில் வந்தது போல இருக்கின்றது என பலரும் இவரை வர்ணித்து வரும் வேளையில் ஒரு சிலர் நேபோடிசம் ஆன் பீச் என இவரை கலாய்த்தும் கடுப்பேற்றியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











