யோகக்காரன்யா விஜய்சேதுபதி.. வீட்டுக்கே அழைத்த கத்ரீனா கைஃப்.. என்ன சங்கதி தெரியுமா?

மும்பை: அந்தாதுன் படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வரும் ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில், பாலிவுட்டில் நடிகர் விஜய் சேதுபதி முகாமிட்டுள்ளார். காரில் சென்று கொண்டிருந்தபோது விஜய் சேதுபதியை தனது வீட்டிற்கு கத்ரீனா கைஃப் அழைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மெரி கிறிஸ்துமஸ் டிரெய்லரில் விஜய் சேதுபதியை இறுக்கி அணைத்து லிப் லாக் திஸ் அடித்திருந்தார் கத்ரீனா கைஃப். இந்நிலையில், விஜய் சேதுபதியை அவரது வீட்டிற்கு அழைக்கிறாரே என்ன விஷயம் என ரசிகர்கள் ஆர்வமாகி உள்ளனர்.

Katrina Kaif asks Vijay Sethupathi come to her house for a special Dosa

கோலிவுட் முதல் பாலிவுட் வரை: நடிகர் தனுஷை போலவே கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடித்து அசத்தி வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஹீரோவாகவும் வில்லனாகவும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக ஏற்று நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 96 படத்தின் கிரைம் வெர்ஷன் போல உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தில் கத்ரீனா கைஃபுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களையும் பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

விஜய் சேதுபதியை வீட்டுக்கு அழைத்த கத்ரீனா கைஃப்: நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தபோது விஜய் சேதுபதியை தனது வீட்டிற்கு கத்ரீனா கைஃப் அழைக்கும் வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது. மேலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடித்தமான உணவை சமைத்து தருவதாகவும் அந்த வீடியோவில் கத்ரீனா கைஃப் பேசி உள்ளார்.

என்ன ஸ்பெஷல்: நடிகர் விஜய் சேதுபதிக்கு சூப்பரான தோசையை மும்பையில் அதுவும் தனது வீட்டில் தானே சுட்டுத் தருகிறேன் வாருங்கள் என கத்ரீனா கைஃப் அழைக்க உண்மையாகவா என விஜய்சேதுபதி ஆச்சரியத்துடன் கேட்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

திருமணம் ஆகிடுச்சு: நடிகை கத்ரீனா கைஃப் பாலிவுட் நடிகர் விக்கி கவுசலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவர்ச்சி பொங்கவும், முத்தக் காட்சிகளிலும் எந்தவொரு பாகுபாடும் காட்டாமல் நடித்து வருகிறார் கத்ரீனா கைஃப் என்பது குறிப்பித்தக்கது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சல்மான் கானின் டைகர் திரைப்படத்தில் வெறும் டவலை கட்டிக் கொண்டு சண்டை போட்டிருந்தார் கத்ரீனா கைஃப்.

ஜவான்: விஜய் சேதுபதி தமிழில் மகாராஜா படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் அவர் நடித்து வெளியாகவிருக்கும் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பிரமோஷனிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ஃபர்ஸி மற்றும் ஜவான் உள்ளிட்ட இந்தி படைப்புகள் பாலிவுட்டில் அவருக்கு அதிகப்படியான ரசிகர்களை சேர்த்துள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மெரி கிறிஸ்துமஸ் படமும் விஜய் சேதுபதிக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X