தோனி பட நாயகியின் புதிய அவதாரம்... என்ன செஞ்சாலும் சும்மா இருக்காரு ட்ரெயினர்

மும்பை : தோனி படத்தில் நடித்ததன்மூலம் தனக்கான ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டவர் கியாரா அத்வானி.

தற்போது லாக்டவுனில் வீட்டில் முடங்கியிருந்தாலும் புதிய திறமையை வளர்த்து வருகிறார் கியாரா.

கிக் பாக்சிங்கில் பயிற்சி பெற்றுவரும் அவர், கால்களாலேயே அவரது பயிற்றுநரின் தொப்பியை லாவகமாக வீழ்த்துகிறார்.

சிறப்பான நடிப்பு

சிறப்பான நடிப்பு

தோனி படத்தின் மூலம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தவர் கியாரா அத்வானி. அந்த படத்தில் தோனியின் மனைவி கேரக்டரில் தோன்றி தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்துவரும் இவர் தற்போது லாக்டவுனில் வீட்டில் உள்ளார்.

7 ஆண்டுகள் நிறைவு

7 ஆண்டுகள் நிறைவு

சமீபத்தில் சினிமா துறையில் தான் வந்து 7 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும் சமூக வலைதளத்திலும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். பல்வேறு வீடியோ மற்றும் ஆடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

தனிப்பட்ட திறமைகள்

தனிப்பட்ட திறமைகள்

இந்த லாக்டவுனில் பலரும் பல்வேறு விஷயங்களில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் குடும்பத்தினருடன் நேரத்தை சிறப்பாக செலவழித்து வருகின்றனர். சிலர் தங்களின் தனிப்பட்ட திறமைகளை வளர்த்து வருகின்றனர். இதில் 3வது ரகத்தை சேர்ந்தவர் கியாரா அத்வானி.

பயிற்சி பெறும் கியாரா

பயிற்சி பெறும் கியாரா

இந்த லாக்டவுனில் கிக் பாக்சிங்கில் தன்னை சிறப்பாக ஈடுபடுத்தி வருகிறார். இதற்கென ஒரு பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார். தற்போது இதில் தேறியுள்ள கியாரா, தன்னுடைய கால்களை சுழற்றி பயிற்சியாளரின் தலையில் உள்ள தொப்பியை லாவகமாக வீழ்த்துகிறார்.

ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சி

ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சி

மேலும் தன்மீது நம்பிக்கை வைத்து பொறுமையுடன் எதிரில் இருந்து தன்னை ஊக்கப்படுத்திய பயிற்சியாளருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக இந்த பயிற்சியை தான் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த லாக்டவுன் சிலருடைய உள்ளிருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரவும் புதிய கலையை கற்கவும் காரணமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X