காதலில் விழுந்த பிரபாஸ்? க்ரித்தி சனோன் உடன் திருமணமா? மௌனத்தை கலைத்த நடிகை!

மும்பை : காதலில் விழுந்த பாகுபலி நடிகர் பிரபாஸ்? க்ரித்தி சனோனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பரவி வரும் செய்திக்கு நடிகை சரியான பதில் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் பிரபாஸ் 42 வயதாகியும் இன்னும் முரட்டு சிங்குளாகவே இருக்கிறார்.

பாகுபலி படம் வெளியான போது, இவரின் நடிப்பையும், அழகையும் பார்த்து சொக்கிப்போன ரசிகைகள் சுமார் 6 ஆயிரம் பேர், நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு திருமணம் செய்ய காத்திருந்தனர். ஆனால், அனைவருக்கும் பிரபாஸ் நோ சொல்லிவிட்டார்.

அனுஷ்காவுடன் காதல்

அனுஷ்காவுடன் காதல்

பாகுபலி படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி கெமிஸ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி இருந்தது. அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல, சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார். ஆனால், அனுஷ்கா, அப்போது குண்டாக இருந்ததால் அந்த படவாய்ப்பு நடிகை ஷ்ரத்தா கபூருக்கு சென்றது.

ஆதிபுருஷ்

ஆதிபுருஷ்

தற்போது நடிகர் பிரபாஸ் இயக்குனர் ஓம் ராவுத்தின் ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து டீசர் வெளியான நிலையில், வீடியோகேமில் வரும் கேரக்டர்களைப்போல காட்சி இருப்பதாகவும், மோசமான அனிமேஷன் என ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.

க்ரித்தி சனோன் உடன் திருமணமா?

க்ரித்தி சனோன் உடன் திருமணமா?

ஆதிபுருஷ் திரைப்படத்தின் ப்ரோமோனில் கலந்து கொண்ட க்ரித்தி சனோன், கரண் ஜோஹரிடம் பேசும்போது, பிரபாஸுடன் டேட்டிங் செய்வதை சூசகமாக தெரிவித்தார். இது சமூக ஊடகங்களில் வைரலானது மற்றும் பல இணையதளங்கள் அவர்களின் திருமண தேதியை ஊகிக்கத் தொடங்கின. இந்நிலையில், நடிகை க்ரித்தி சனோன் இணையத்தில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முற்றிலும் போலியான செய்தி

முற்றிலும் போலியான செய்தி

அந்த அறிக்கையில், இது பியாரோ அல்லது PRயோ அல்ல.. எங்கள் பேட்டி ஓரு ரியாலிட்டி ஷோவில் கொஞ்சம் அதிகமாகவே சென்றுவிட்டது. அவரது வேடிக்கையான, கேலியான கேள்வி வதந்திகளுக்கு வழிவகுத்துவிட்டது. சில ஊடகங்கள் எனது திருமண தேதியை அறிவிக்கும் முன் நான் சொல்லியே ஆகவேண்டும். அவை முற்றிலும் வதந்திகள், ஆதாரமற்றவை, போலியான செய்தி என வதந்திக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X