பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் வீட்டில் சோகம்... அதிகாலை முதல் திரண்ட பிரபலங்கள்!

சென்னை: 1984ம் ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை மாதுரி தீட்சித்.

ஹம் ஆப்கே ஹை கோன், புகார், தேவதாஸ் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

முக்கியமாக மாதுரி தீட்சித்தின் நடன அசைவுகளுக்கு பாலிவுட் ரசிகர்களே கிறங்கிப் போய் கிடந்தனர்.

இந்நிலையில், மாதுரி தீட்சித்தின் அம்மா திடீரென உயிரழந்தது பாலிவுட் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லேடி பிரபுதேவா

லேடி பிரபுதேவா

1984 முதல் இந்தி திரையுலகில் நடிகையாக வலம் வரும் மாதுரி தீட்சித், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிப்பை விடவும் தனது நடனத்தால் ரசிகர்களை கட்டிப் போட்ட பெருமை இவருக்கு உண்டு. முக்கியமாக 'புகார்' படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் ஹிட்டடித்த Kay Sera Sera என்ற பாடலில், பிரபுதேவாவுக்கே டஃப் கொடுத்து ஆட்டத்தில் கலக்கியிருப்பார். அதேபோல், ஷாருக்கானின் தேவதாஸ் படத்தில் இடம்பெற்ற Dola Re Dola பாடலில் ஐஸ்வர்யா ராய்யும் மாதுரி தீட்சித்தும் அமர்க்களம் செய்திருப்பார்கள்.

மாதுரி தீட்சித் வீட்டில் சோகம்

மாதுரி தீட்சித் வீட்டில் சோகம்

இந்தியில் இப்போதும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக பார்க்கப்படுகிறார் மாதுரி தீட்சித். இந்நிலையில், அவரது அம்மா சினேலதா தீட்சித் இன்று (மார்ச் 12) காலை 8.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 91. இதனையறிந்த பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாதுரி தீட்சித்தின் தந்தை ஷங்கர், 2013ம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் மகள் மாதுரி தீட்சித்துடன் வசித்து வந்தார் சினேலதா. உயிரிழந்த மாதுரி தீட்சித்தின் அம்மா சினேலதா, சிறந்த கிளாசிக்கல் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணீரில் மாதுரி தீட்சித்

கண்ணீரில் மாதுரி தீட்சித்

தனது அம்மாவிடம் இசை கற்றுக்கொண்ட மாதுரி தீட்சித், அதன் பலனாக சில பாடல்களையும் பாடியுள்ளார். சினேலதாவுக்கு பார்தி, ரூபா தீட்சித் என மேலும் 2 மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அவருக்கு மாதுரி தான் செல்ல மகளாக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி மாதுரி தீட்சித்தின் கணவர் ஸ்ரீராம் நேனி மருத்துவர் என்பதால், அவரே சினேலதாவின் உடல்நலத்தையும் கவனித்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக மறைவு

வயது மூப்பு காரணமாக மறைவு

சினேலதா மறைவுக்கு வயது மூப்பு தான் காரணம் என சொல்லப்படுகிறது. தாயாரின் மறைவால் சோகத்தில் மூழ்கிய நடிகை மாதுரி தீட்சித்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாதுரி தீட்சித்தின் தாயார் சினேலதாவின் இறுதிச் சடங்குகள் இன்றே நடைபெற உள்ளதாம். மும்பை வோர்லி பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சினேலதாவின் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X