காதலனை கழட்டி விட்டாரா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மலைகா அரோரா!
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மலைகா அரோரா, ஆறு ஆண்டுகளாக, போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பாலிவுட்டில் செய்தி பரவி வரும் நிலையில், செம ஜாலியாக இருக்கும் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொலைக்காட்சி பிரபலமாக இருந்த மலைகா அரோரா, மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் வரும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான தையா தையா பாடலுக்கு ஆடி மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஷாருக்கான், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்தப் படம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றதோ அதே அளவுக்கு வரவேற்பை பெற்றது. இவருக்கு ஏற்கனவே அர்பாஸ் கான் எனும் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அர்பாஸ் கான் மலைகா அரோரா தம்பதியினருக்கு 20 வயதில் அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார்.

மலைகா அரோரா: காதல் கணவரான இயக்குநர் அர்பாஸ் கானை பிரிந்த பிறகு பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வந்தார் மலைகா அரோரா. 2019ம் ஆண்டு அர்ஜுன் கபூரை மலைகா அரோரா காதலித்து வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருவரும் இன்ஸ்டாகிராமில் படு நெருக்கமாக முத்த மழை பொழியும் போட்டோக்களும் பார்ட்டிகளுக்கு செல்லும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தனர். இருவருக்கும் இடையே ஏறக்குறைய 12 வது வித்தியாசம்.

50 வயசா: மகனின் காதலுக்கு போனி கபூர் கடும் எதிர்ப்பை தெரிவித்த போதும், அதையெல்லாம் அவர் கண்டுகொல்லாமல், இருவரும் லிவிங் டு கெதரில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் தற்போது மலாய்கா அரோராவை அர்ஜுன் கபூர் பிரேக்கப் செய்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது. ஆனால் அதனை மறுக்கும் விதமாக தற்போது மலாய்கா அரோரா பிகினியில் செம ஜாலியாக இருக்கும் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், இவங்களுக்கு 50 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.




Click it and Unblock the Notifications