பாம்பாட்டம் படத்தில் குயினாக நடிக்கும் பிரபல கிளாமர் குயின்.. இரண்டாவது கட்ட ஷூட்டிங் ஆரம்பம்!

சென்னை: பாம்பாட்டம் படத்தில் பிரபல கவர்ச்சி நடிகையான மல்லிகா ஷெராவத் இணைந்துள்ளார்.

ஓரம்போ, வாத்தியார். 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் தயாரிக்கும் படம் பாம்பாட்டம்.

இப்படம் பிரமாண்ட வரலாற்று படமாக உருவாகிறது. இந்தப் படத்தை பொட்டு படத்தை இயக்கிய இயக்குநர் விசி வடிவுடையான் இயக்குகிறார்.

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதில் நான் அவன் இல்லை படத்தின் நடித்த நடிகர் ஜீவன், நடிகை யாஷிகா ஆனந்த், ரித்திகா சென் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

டிவிட்டரில் அறிவிப்பு

டிவிட்டரில் அறிவிப்பு

ஹாரர் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான மில்லிகா ஷெராவத் இணைந்துள்ளார். பாம்பாட்டம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மல்லிகா ஷெராவத் படத்தில் இணைந்திருப்பதை இயக்குநர் தனது டிவிட்டர் பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.

500 குதிரைகளுடன்..

500 குதிரைகளுடன்..

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்கும் மல்லிகா ஷெராவத், பாம்பாட்டம் படத்தில் இளவரசியாக நாகமதி என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார். மல்லிகா ஷெராவத் நடிக்கும் காட்சிகள் 500 குதிரைகளுடன் பெரும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலாசலா பாடல்..

கலாசலா பாடல்..

மல்லிகா ஷெராவத் கடைசியாக தமிழில் கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அதனை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கலாசலா பாடலுக்கு நடனமாடினார்.

மூன்று கால கட்டங்கள்

மூன்று கால கட்டங்கள்

மல்லிகா ஷெராவத் இறுதியாக வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்தார்.
பாம்பாட்டம் படத்திற்கு அம்ரேஷ் இசையமைக்கிறார். இந்த பாம்பாட்டம் படம், 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்று கதை ஆகும்.

சன்னி லியோன் அறிமுகம்

சன்னி லியோன் அறிமுகம்

இதனிடையே இயக்குநர் வடிவுடையான் வீரமாதேவி என்ற வரலாற்று படத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை போன்ஸ் ஸ்டீஃபன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நடிக்கும் சன்னி லியோன் இதன் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நவ்தீப்பும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X