Don't Miss!
- News
கலிங்கப்பட்டியில் நடைபெற்ற வளைகாப்பு விழா! அப்படியே வைகோ வீட்டுக்கு விசிட் அடித்த கனிமொழி எம்.பி.!
- Finance
தூள் கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. நிகர லாபம் ரூ.8,312 கோடியாக அதிகரிப்பு..!
- Sports
வீதிக்கு வந்த மைக்கேல் கிளார்க்கின் கள்ளக் காதல்.. நடுரோட்டில் அறைந்த மனைவி.. என்ன நடந்தது?
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
மல்லிகா ஷெராவத், ஜீவன் நடிக்கும் ‘பாம்பாட்டம்‘..ஹாலிவுட் தரத்திற்கு மிரட்டிய டிரைலர்!
சென்னை : பாம்பாட்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது.
பாலிவுட் நடிகை மல்லிகா செராவத், நடிகை ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா, சுமன், பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இனியன் ஜே. ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைத்திருக்கிறார்.
அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யாததால் படவாய்ப்பை இழந்தேன்.. மல்லிகா ஷெராவத் பகீர் தகவல்!

பாம்பாட்டம்
பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிப்பில் சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பாம்பாட்டம். பாம்மை மையமாக வைத்து வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மகாராணியாக நடித்துள்ளார்.

ஹாலிவுட் தரத்திற்கு
நான் அவனில்லை, திருட்டு பயலே படத்தில் நடித்த ஜீவன் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப்பிறகு இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசத்தால் அரண்மனையில் அடிக்கடி மரணம் நிகழ்கிறது. இதனால், அரண்மனையை அரசு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கிறது. இருப்பினும் மர்ம மரணம் தொடர்கிறது. இந்திய சினிமாவில் இதுவரை பார்க்காத ஆச்சரியத்தை ஹாலிவுட் தரத்திற்கு இயக்குநர் கொடுத்துள்ளார்.

பிரம்மாண்ட செட்
பாம்பாட்டம் படம் குறித்து பேசிய இயக்குனர் வி.சி.வடிவுடையான், பொதுவாக அனைவருடைய வாழ்க்கையுமே ஒரு பரமபதம்தான். அதுபோல ஒரு சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம்தான் 'பாம்பாட்டம்' ஒரு சாம்ராஜ்யம் சந்திக்கும் ஏற்ற, இறக்கங்கள் தான் படத்தின் கதை, கி.பி.1000, 1500, 1980 என மூன்று காலகட்டங்களில் கதை நகரும். இதற்கான செட், உடைகள், அந்தந்த காலக்கட்டத்தை உங்கள் கண்முன் நிறுத்தும் வகையில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டது.

சுவாரஷ்யமான பல காட்சிகள்
மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலும், குடும்பமாக வந்து ரசிக்கும் அளவுக்கு சுவாரஷ்யமாக பல காட்சிகள் இருக்கும். போர்க் காட்சிகளுக்காக பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. மும்பை தவிர, சென்னை, மைசூர் அரண்மனை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம் என்றார். இன்று டிரைலர் வெளியாகி உள்ள நிலையில், பாம்பாட்டம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.