அம்மா பேச்சை கேட்ட பாலிவுட் நடிகை.. பச்சை குத்தியதை அழித்தார்!

மும்பை : தன் கையில் இருக்கும் டாட்டூவை எடுத்து விட்டார் மாடல் அழகி நேஹா மாலிக். தாங்க முடியாத வலி என்றும் கூறியிருக்கிறார்.

ஆடிஷன்ஸ், ஆக்ட்டிங் டெஸ்ட், வாய்ஸ் டெஸ்ட் போன்ற பல தேர்வுகளுக்கு பின் ஹீரோயின்னாக நடித்த காலங்கள் மறைந்து மாடலிங் செய்பவர்கள் ஹீரோ, ஹீரோயின்னாக நடிக்கும் காலம் வந்துவிட்டது .

 Bollywood actress Neha Malik has removed Tattoo

அந்த வகையில் பெரும்பாலும் அனைத்து நடிகர்களும் மாடலிங் துறையில் இருந்து வந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் நேஹா மாலிக்கும் அடங்குவார். 2012இல் தனது மாடலிங் தொழிலை ஆரம்பித்த இவர் பல மியூசிக் வீடியோக்களிலும் தென்பட்டார். பிறகு வழக்கம் போல் சினிமா வாய்ப்பு கதவை தட்டியது. பன்வாரிக்கா ஜால் என்ற ஹிந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஹீரோயினாக நிலைக்க போட்டோஷூட்ஸ் மட்டும் நடத்தினால் மட்டும் போதாது என்று நன்கு அறிந்த இவர் உடற்பயிற்சியிலும் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோஸ் அனைத்தும் மிகவும் வைரலாகவே பரவப்பட்டது.

நடிகைகள் எந்தெந்த விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எடுத்து கொண்டால் டாட்டூ போடுவது பல நடிகைகளுக்கு பிடித்தமான விஷயமாக இருக்கின்றது. கோலிவுட், பாலிவுட் என்ற பிரிவே இதற்கு கிடையாது என்றே சொல்லலாம்.

 Bollywood actress Neha Malik has removed Tattoo

நம்ம ஊரு நடிகைகள் பலபேர் இந்த டாட்டூவிற்கு மிகப்பெரிய மோகமாக இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக மறைவான இடங்களை டாட்டூ போடுவது அவங்களுக்கு ஒரு சுவாரசியம் தன்னுடைய உடம்புல இருக்கிற டாட்டூவை யாராவது கண்டு பிடிக்கிற மாதிரி லைட்டா எட்டி பார்க்க வைக்கிறது இன்னொரு சுவாரசியம்.

நமது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா இன்னும் எத்தனையோ பேர் டாட்டூ போடுவதும் அதனை டிரீட்மென்ட் மூலம் அழிக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது நேஹா மாலிக்கும் தனது கையில் இருக்கும் டாட்டூவை அழிப்பதற்கு டிரீட்மென்ட் செய்திருக்கிறார். அவர் எடுத்த டிரீட்மெண்டை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். அந்த டாட்டூ அன்னையர் தினத்திற்கு அவர் போட்டதாகவும் கூறியுள்ளார்.

 Bollywood actress Neha Malik has removed Tattoo

தற்போது அவரின் அம்மா டாட்டூவை வைத்துக்கொண்டால் நேஹாவின் சினிமா கேரியருக்கு அது இடைஞ்சலாக இருக்கும் என்றும் அதனை எடுக்க சொன்னதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அம்மாவின் பேச்சை கேட்ட நேஹா டாட்டூவை எடுக்கும் பணியில் இறங்கினார். அந்த வீடியோவையும் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும், அதை எடுக்கும் போது மிகுந்த வலி இருந்ததாகவும், போடும் போது கூட இப்படி வலிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட போட்டோக்களும், வீடியோக்களும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த பலரும் இதெல்லாம் தேவையா என்று கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

Recommended Video

திருமணமான ஆண்களை காதலிக்காதீங்க... நான் நிறைய பட்டுட்டேன்... ரசிகைகளுக்கு பிரபல நடிகை வார்னிங்! - வீடியோ

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X