பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ஒரு வாரத்திற்கு பின் உடல் மீட்பு!
மும்பை: பிரபல நடிகை நூர் மலாபிகா தாஸ் மும்பையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒருவாரத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் துர்நாற்றம் வீசிநிலையில், ஒருவாரத்திற்கு பிறகு, அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் இந்தி சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அசாமின் கரீம்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நூர் மாலாபிகா தாஸ். சிஸ்கியான், வால்கமன், தீக்கி சட்னி, ஜகன்யா உபயா, சரம்சுக், தேக்கி அந்தேகி, பேக்ரோட் ஹஸ்டில் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கஜோல் மற்றும் ஜிஷு சென்குப்தாவின் தி ட்ரயல் படத்தில் நடித்தார். இவர் சினிமாவிற்கு நுழைவதற்கு முன்பு, கத்தார் ஏர்வேஸில் விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றினார். சினிமா மீது இருந்த ஆசையால் அந்த பணியை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்தார்.

நூர் மாலாபிகா தாஸ்: மும்பையின் ஒஷிவாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த குடியிருப்பிலிருந்து கடந்த சில நாட்களாக துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி போலீசாருக்கு புகார் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நூா் மாலாபிகா தாஸின் வீட்டை திறந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனஅழுத்தம்: இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாலாபிகா தாஸ் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதற்காக மருந்து எடுத்துவந்ததாகவும். தனது குடியிருப்பில் உள்ள மின்விசிறியில் ஜூன் 4 தேதி மாலை அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து நடிகையின் டைரி மற்றும் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

உடலை வாங்கவில்லை: நூர் மாலாபிகாவின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அவரது உடலை வாங்க யாரும் முன்வரவில்லை, எனவே, உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்யும் மம்தானி ஹெல்த் அண்ட் எஜுகேஷன் டிரஸ்ட் என்ஜிஓ உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை அவரது இறுதிச் சடங்குகளை போலீஸார் செய்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் பாலிவுட் சினிமா உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)


Click it and Unblock the Notifications











