படப்பிடிப்பின் போது தவறாக தொட்ட நடிகர்.. ஓங்கி அறைந்த பாகுபலி நடிகை!

மும்பை : படப்பிடிப்பின் போது நடிகர் ஒருவர் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டது குறித்து மன வருத்தத்துடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகையான நோரா ஃபதேஹி மாடல் , நடனக் கலைஞர் , பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகொண்டவர்.
இவர் இந்தி , தெலுங்கு , தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

நடிகை நோரா ஃபதேஹி

நடிகை நோரா ஃபதேஹி

கனடாவில் பிறந்து வளர்ந்த நோரா ஃபதேஹி 2015 ஆம் ஆண்டு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 9ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின், ரியாலிட்டி நடன நிகழ்ச்சியான ஜலக் திக்லா ஜாவில் கலந்து கொண்டு தனது நடனதிறமையை வெளிப்படுத்தினார்.

மானோகரி பாடலுக்கு

மானோகரி பாடலுக்கு

பாலிவுட் திரைப்படமான ரோர் : டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், டெம்பர் , பாகுபலி , கிக் 2 போன்ற படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். உலக புகழ் பெற்ற பாகுபலி படத்தில் வந்த மானோகரி பாடலில் கலக்கலாக டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு பரீச்சியமானார்.

தவறாக தொட்டார்

தவறாக தொட்டார்

தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நோரா பதேஹி அண்மையில் அளித்துள்ள பேட்டியில், நடிகர் ஒருவர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டது குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். அதில், என்றுடைய முதல் படமான ரோர் : தி டைகர் ஆஃப் சுந்தர்பேன்ஸ் என்கிற படத்தின் படப்பிடிப்பின் போது,என்னுடன் நடித்த சக நடிகர் என்னை தவறாக தொட முயற்சித்தார்.

அசிங்கமாக திட்டினார்

அசிங்கமாக திட்டினார்

அவர் என்னிடம் அசிங்கமாக நடந்து கொண்டதால், அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். தவறு செய்துவிட்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அந்த நபரும் என்னை ஓங்கி அடித்தார். நான் மீண்டும் அவரை அடித்தேன்.இதையடுத்து எங்கள் இருவருக்குள்ளும் கைகலப்பு ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் அந்த நடிகர் தகாத வார்த்தையால் என்னை மோசமாக திட்டினார் என்று நடிகை நோரா பதேஹி பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டி பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X