நீங்கள் யாரை காதலிக்கிறீர்களோ அவரை கட்டி பிடித்து தூங்குங்கள்.. பிரீத்தி ஜிந்தா !

மும்பை : வட்ட முகம் புன்னகை நிறைந்த குணம் என பார்க்கும்போதே பற்றிக்கொள்ளும் நபர் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா. அவர் தற்போது தனக்கு மிகவும் பிடித்த நபரை கட்டிப்பிடித்து படுத்து கொண்டுள்ள ஒரு படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளார்.

சிம்லாவில் பிறந்த இவர் இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தவர். அனைவரிடமும் மிக சகஜமாக பழகும் பண்பு கொண்ட இவர் இயக்குனர் மணிரத்னம் தமிழ் மற்றும் ஹிந்தியில் என இரு வேறு மொழிகளிலில் ஒரே சமயத்தில் இயக்கிய உயிரே என்ற படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் மூலம் அனைவரின் நெஞ்சத்திலும் இடம் பிடித்த ஒரு நடிகையானார்.

இவரை பார்த்த உடனேயே அனைவரின் மனதிலும் பதிந்துவிடும் பொலிவான முகம். அவரது முகத்தில் இருக்கும் புன்னகை தோன்றம் அவரது அழகை மேலும் கூட்டும்.

 கண்ணக் குழியழகி

கண்ணக் குழியழகி

பார்க்க மிகவும் அழகா இருக்கும் ப்ரீத்தி ஜீந்தா தனது கண்ணக் குழியழகாலும் அவரது கொஞ்சும் நடிப்பாலும் ரசிகர்களை கட்டிபோட்டிருந்தார். அவரின் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலின் நடனத்திற்க்கு மயங்காத ஆட்களே இல்லை என்று தான் சொல்லவேண்டும். நடிப்பு, நடனம் கவர்ச்சி என அனைத்திலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.

 கிரிக்கெட் விரும்பி

கிரிக்கெட் விரும்பி

இவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட், அந்த தீவிரத்தின் காரணமாக இவர் இந்தியன் பிரீமியர் லீகில் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்து தன்னுடை ஆணி விளையாடும் போதெல்லாம் வீரர்களை உற்சாகப்படுத்த விளையாட்டு மைதானத்திற்கே சென்று விடுவார். அந்த அணி வெற்றி பெற அவர்களை பெரிதும் உற்காகப்படுத்துவார்.

 கட்டிப்பிடித்து தூங்குகள்

கட்டிப்பிடித்து தூங்குகள்

இவர் தன்னுடன் செல்லமாக ஒரு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார் அதன் பெயர் பர்னோ. இந்த குவாரன்டைன் சமயத்தில் இவருடன் தான் தன்னுடைய பொழுதை கழித்து வருகிறார். மேலும் பர்னோவின் கொண்ட அன்பால் அவர் அதை கட்டி பிடித்து படுத்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதனுடன் நீங்கள் யாரை யாரை காதலிக்கிறீர்களோ அவர்களை கட்டி பிடித்து தூங்குங்கள் என அந்த புகைப்படத்தில் பதிவிட்டுள்ளார் ப்ரீத்தி.

Recommended Video

Bigg Boss Abhirami glamour photo shoot | Abhirami Venkatachalam
 அளவில்லாத அன்பு

அளவில்லாத அன்பு

அந்த படத்திற்கு பலரும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பெண்மணி நீங்கள் சொன்னது சரியே உண்மையாகவும் நம்பிக்கையுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அளவில்லாத பாசத்தை கொடுக்கும் ஒரு சிறந்த பிராணி நாய் தான் என தனது பார்வையை சொன்னார். இன்னொருவர் இதை அனைத்து அம்மாக்களிடமும் கொஞ்சம் சொல்லுங்கள் என கல்யாணத்தின் மீதும் ஆண்களின் மீதும் நம்பிக்கையில்லாதது போல் கூறியிருந்தார். எது எப்படியோ நாய்கள் என்றுமே மனிதனை விட நன்றியுள்ளது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X