கருப்பையில் கட்டி.. நடக்க முடியாமல் வலியால் துடிக்கும் ராக்கி சாவந்த்!

மும்பை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ராக்கி சாவந்த். சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்திற்கு, கடந்த வாரம் கருப்பை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது சற்று உடல் நலம் தேரி இருக்கும் இவர், எழுந்து கூட நடக்கமுடியாமல், வலியால் அவதிப்படும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஓவராக கவர்ச்சி காட்டும் ராக்கி சாவந்த், தனது இன்ஸ்டாகிராம் பாலோவர்களை அதிகரிக்க கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் 2019 ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரான ரித்தேஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் அவர் ஏமாற்றி விட்டதாக மீடியா முன் கதறி அழுதார். இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு ஆதில் துரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் ஆதில், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது நிர்வாண வீடியோவை ஆதில் பல கோடிக்கு விற்றுவிட்டதாக புகார் கூறினார். அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

Bollywood actress Rakhi Sawant painful video from hospital

தாங்கமுடியாத வலி: இந்நிலையில் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராக்கி சாவந்த்தை அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங், மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாகவும், அது கருப்பை புற்றுநோயாக கூட இருக்கலாம் என்றும் அதிர்ச்சி கொடுத்தனர். இதன் பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்து ஒருவாரமான நிலையில், மருத்துவர்கள் அவருக்கு நடை பயிற்சி கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், ராக்கி சாவந்த் நடக்கக்கூட முடியாமல் வலியால் அவதிப்படுகிறார். இதைப்பார்த்து வேதனைப்படும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X