நெஞ்சுவலி என மருத்துவமனையில் அட்மிட்டான பிரபல நடிகை.. கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?
மும்பை: சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், நேற்று முன் தினம் இரவு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது முன்னாள் கணவர் தான் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார். ஆரம்பத்தில் நெஞ்சுவலி மற்றும் வயிற்று வலி என கூறி வந்த அவர், தற்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
45 வயதாகும் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி பாலிவுட்டையே கதிகலங்க வைத்துள்ளார். மிகவும் மோசமான உடைகளை அணிவது, பலருடன் நெருக்கம் என அவர் போடாத ஆட்டமே கிடையாது. முதல் கணவரான ரித்தேஷ் சிங்கை விவாகரத்து செய்துவிட்டு அதில் கான் என்பவரை கடந்த 2022ம் ஆண்டு 40 பிளஸ் வயதில் அவர் திருமணம் செய்துக் கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும், அதில் கானுடனும் ராக்கி சாவந்த் பிரச்சனை செய்து சண்டை போட்டது பரபரப்பை கிளப்பிய நிலையில், திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ஷாக்கை கிளப்பியது.
யாரு இந்த ராக்கி சாவந்த்?: 1997ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அக்னிசக்ரா படத்தின் மூலம் அறிமுகமானார். சுடாலி நம்பர் 1, குருக்ஷேத்ரா, 6 டீன்ஸ், தம், சரத்குமார் நடித்த கம்பீரம், பைசா வசூல், ஏக் கஹானி ஜூலி கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் ராக்கி சாவந்த். பிக் பாஸ் இந்தி சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்ற ராக்கி சாவந்த் பிக் பாஸ் 14வது சீசனிலும் இவர் போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. பல பாலிவுட் படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கும் இவர் குத்தாட்டம் போட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி: திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கருப்பையில் தற்போது டியூமர் இருப்பதாக அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
கருப்பை புற்றுநோய்: Uterus Tumour என மருத்துவர்கள் சொன்னாலும், கருப்பை புற்றுநோய் இருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதுதொடர்பான பரிசோதனைகளையும் மேற்கொள்ளப் போவதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனது முன்னாள் மனைவி ராக்கி சாவந்த் குணமடைய வேண்டும் என ரசிகர்களை பிரார்த்தனை செய்ய ரித்தேஷ் சிங் கூறியுள்ளார். அதில் கான் இதுதொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











