சாரா அலி கானா இது..தீவிர ஒர்க் அவுட்..ஆளே மாறிய த்ரோ பேக் வீடியோ !

மும்பை : சாரா அலிகான் பழைய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

சைப் அலிகானின் மகளான சாரா அலிகான் தந்தையைப் போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டு இப்போது பல படங்களில் நடித்துக் அந்த ஆசையை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்.

ரன்வீர் சிங்குடன் இவர் நடித்து வெளியான சிம்பா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இப்போது தன்னுடைய நடிப்பு திறமையால் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

சாரா அலிகான்

சாரா அலிகான்

இந்தி நடிகர் சயிப் அலிகானின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்ரிதா சிங் இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தனது அம்மாவும் ஒரு நடிகை அப்பாவும் ஒரு நடிகர் எனவே தானும் ஒரு நடிகையாக வேண்டுமென்ற ஆசையும் இருந்து வந்துள்ளது சாரா அலி கான்.

பிரச்சனை

பிரச்சனை

இதையடுத்து, கேதார்நாத் என்ற படத்தில் முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். சுசாந்த் சிங் ராஜ்புட்டுடன் இணைந்து நடித்த முதல் படத்திலேயே கலக்கி இருப்பார் சாரா அலிகான். இந்த படம் சில பல பிரச்சினை காரணமாக படம் வெளியாவது சற்று தாமதமானது. படம் தாமதமாக வந்தாலும், இந்த படத்தை பார்த்த அனைவரும் சாரா அலி கானையும் வெகுவாக பாராட்டினர்.

கார்த்திக் ஆர்யான்

கார்த்திக் ஆர்யான்

முதல் பட வெற்றியை தொடர்ந்து சாரா, ரன்வீர் சிங்குடன் சிம்பா என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வந்த நிலையில் சாராவிற்கு அடுத்தடுத்த படங்கள் குவிய தொடங்கியது. அந்த வெற்றியை தொடர்ந்து கார்த்திக் ஆர்யானுடன் லவ் ஆஜ் கல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

நகைச்சுவை படம்

நகைச்சுவை படம்

இப்படி வெற்றிகளைக்கண்ட சாரா அலி கான் தனது வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வருகிறார். இவர் இப்பொழுது வருண் தவானுடன் ஜோடி சேர்ந்து "கூலி நம்பர் ஒன்" என்ற காமெடி படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். படம் மே 1ல் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக இப்படம் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 தனுஷூடன் ஜோடி

தனுஷூடன் ஜோடி

இவர் நடிகர் அக்சய் குமார் மற்றும் தனுஷ் உடன் இணைந்து ‘அத்ரங்கி ரே‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இது நடிகர் தனுசுக்கு மூன்றாவது ஹிந்தி படம் ஆகும். இந்த படத்தில் சாரா அலிகான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் தனுஷ் மதுரையைச் சேர்ந்த இளைஞராக நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசைத்துள்ளார்.

குண்டு சாரா

இப்போதுள்ள சூழ்நிலையில் நடிகைகள் பலரும் விதவிதமாக தங்களது போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் வேளையில் சாரா, தனது பழைய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இவர் இப்போது இருப்பதைவிட மிகவும் குண்டாக இருக்கிறார். தான் குண்டாக இருக்கும் அந்த படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து பகிர்ந்துள்ளார். பின் ஒர்க்கவுட் செய்து தனது உடம்பை பிட்டாக கொண்டு வந்த ஒர்க்கவுட் வீடியோவையும் அதனுடன் இணைத்து பதிவிட்டிருக்கிறார்.

Recommended Video

Dhanush Emotional message | உள்ளம் கனிந்த நன்றி | Dhanush k Raja
தீவிர உடற்பயிற்சி

தீவிர உடற்பயிற்சி

மேலும், தனது தம்பி இப்ராஹிம் அலி கானுடன் செய்யும் உடற்பயிற்சியும், நீச்சல் உடையில் நீந்தும் காட்சி என பலவற்றை அதில் இணைத்து அந்தப் பதிவையும் போட்டு இருக்கிறார். மேலும் இவர் தனது பழைய உடலை பற்றி எந்த ஒரு கவலையும் படாமல் தான் என்ன ஆகவேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கான பயிற்சியில் செய்து தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர் அவரது தன்னப்பிக்கையும்அவரது தீவிர உடற்பயிற்சி பற்றியும் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X