Shilpa Shetty Divorce - ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா பிரிவு.. அனைத்துக்கும் காரணம் ஆபாச பட வழக்கா?
மும்பை: Shilpa Shetty Divorce (ஷில்பா ஷெட்டி விவாகரத்து) நடிகை ஷில்பா ஷெட்டியை பிரிவதாக ராஜ் குந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. 1993ஆம் ஆண்டு வெளியான பாஸிகர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று ஷில்பா ஷெட்டிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் பட வாய்ப்புகள் கிடைக்க அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு சரசரவென்று வளர்ந்து லீடிங் ஹீரோயின் ஆனார்.
தமிழில் ஷில்பா: ஹிந்தியில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தவர் பிரபுதேவா ஹீரோவாக நடித்து கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். படம் ஆஹா ஓஹோ ஹிட் இல்லையென்றாலும் பலராலும் ரசிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டியின் நடிப்பும் பிரபுதேவாவுக்கு போட்டியாக பாடல்களில் அவர் ஆடிய நடனமும் தமிழ்நாட்டு ரசிகர்களால் கொண்டாடவேப்பட்டது.
தமிழுக்கு பை: அதனையடுத்து தமிழில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மீண்டும் ஹிந்திக்கே சென்றார். இப்படிப்பட்ட நிலையில் அவரை குஷி படத்திற்காக மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா. அந்தப் படத்தின் சூப்பர் ஹிட் பாடலான மேக்கௌரினா பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து க்யூட் டான்ஸ் ஆடியிருந்தார்.
திருமணம்: தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் கடந்த 2009ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்துக்கு பின்பு நடிப்பை குறைத்துக்கொண்ட அவர் பிஸ்னெஸில் கவனம் செலுத்தினார். ஐபிஎல்லில் முதலில் ராஜஸ்தான் அணியை ஷில்பாதான் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாச பட வழக்கு: ராஜ் குந்த்ரா - ஷில்பா ஷெட்டியின் வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் அதாவது கடந்த 2021ஆம் ஆண்டு ஆபாச படங்களை தயாரித்து ஆன்லைனில் விற்றதாக ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த அவர் பிணையில் வெளியே வந்தார்.
சுமூகம் இல்லை: சிறையிலிருந்து வெளியே வந்தாலும் ஷில்பாவுக்கும், குந்த்ராவுக்கு முன்னர் இருந்ததுபோல் திருமண வாழ்க்கை சுமூகமாக செல்லவில்லை என கூறப்படுகிறது. ஏனெனில் ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டது ஷில்பாவை ரொம்பவே பாதித்துவிட்டதாகவும்; அந்த சமயத்திலேயே விவாகரத்து கேட்டதாகவும் பாலிவுட் வட்டாரம் தெரிவித்தது.

விவாகரத்து: இந்நிலையில் ராஜ் குந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் இருவரும் பிரிகிறோம். இந்த கடினமான காலத்தை கடப்பதற்கு எங்களுக்கு அவகாசம் தாருங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார். ராஜ் குந்த்ராவின் இந்த பதிவில் ஷில்பா ஷெட்டியின் பெயர் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் இருவரும் பிரிவதை இந்தப் பதிவு உறுதி செய்திருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











