நடுகாட்டில் சூர்ய நமஸ்காரம்... இப்படியொரு யோகாவா என மிரண்ட ரசிகர்கள் !

மும்பை : இளமைத் துள்ளலான நடிப்பின் மூலம் ரசிகர்களை இன்று வரை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி பாலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் இன்றுவரை வலம் வருகிறார்.

ஷாருக்கான், அக்ஷய் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் ஷில்பா ஷெட்டி தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் பாலிவுட்டில் நடிக்க தொடங்கி இருக்கும் ஷில்பா ஷெட்டி "அங்கம்மா 2 " மற்றும் "நிகம்மா" போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதை தொடர்ந்து இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரும் மிரளும் வகையில் நடுக்காட்டில் யோகா செய்து அசத்தியுள்ள புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

அடுத்தடுத்து ஒப்பந்தமாகி

அடுத்தடுத்து ஒப்பந்தமாகி

ஷாருக்கான் நடிப்பில் வெளியான "பஸிகர்" என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரைப்பட உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஷில்பா ஷெட்டி, தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வந்தார்.

அதிக வசூலை அள்ளி

அதிக வசூலை அள்ளி

1994ஆம் ஆண்டு அக்ஷய் குமாருடன் இணைந்து இவர் நடித்த "மைன் கில்லாடி து அனாரி" திரைப் படத்தில் இரண்டு வேடங்களில் கலக்கி இருந்த ஷில்பா ஷெட்டி பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் அந்த ஆண்டில் வெளியாகி அதிக வசூலை அள்ளிய ஐந்து திரைப்படங்களில் ஒன்றாக வசூல் சாதனை புரிந்தது.

மிஸ்டர் ரோமியோ

மிஸ்டர் ரோமியோ

இவ்வாறு பாலிவுட்டில் சக்கை போடு போட்டு வந்து நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபுதேவா இரு வேடங்களில் கலக்கி இருந்த மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத் துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

மீண்டும் பாலிவுட்டுக்கு பறந்தார்

மீண்டும் பாலிவுட்டுக்கு பறந்தார்

மிஸ்டர் ரோமியோ மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் தமிழிலும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டானதைத் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் பாலிவுட்டுக்கு பறந்தார்.

தமிழில் நடிக்கவில்லை

தமிழில் நடிக்கவில்லை

இவ்வாறு மிஸ்டர் ரோமியோ திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்த ஷில்பா ஷெட்டி தொடர்ந்து ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வர அதன் பின் தமிழில் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை.

மீண்டும் துளிர்விட்டு

மீண்டும் துளிர்விட்டு

இந்நிலையில் சமீபகாலமாக திரைத்துறைக்கு சிறிதுகாலம் முக்காடு போட்டிருந்த ஷில்பா ஷெட்டி இப்பொழுது மீண்டும் துளிர்விட்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடுகாட்டில் யோகா

நடுகாட்டில் யோகா

"அங்கம்மா 2 " மற்றும் "நிகம்மா" போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் இவரை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடுகாட்டில் இவர் யோகா செய்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

Anushka Shetty Rare picture |Family Time | Nishabdham
அசால்ட்டாக சூரிய நமஸ்காரம்

அசால்ட்டாக சூரிய நமஸ்காரம்

ஹீரோயின்கள் பலரும் லாக் டவுனில் உள்ள நேரத்தை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்று வரும் நிலையில் இப்பொழுது ஷில்பா ஷெட்டியும் நடுக்காட்டில் ஒற்றைக்காலில் நின்றவாறு கைகள் இரண்டையும் மேலே கூப்பிட்டு எந்த ஒரு உதவியும் இல்லாமல் அசால்ட்டாக ஒற்றைக்காலில் சூரிய நமஸ்காரம் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஷில்பா ஷெட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X