கர்ப்பமாக இருந்தபோது தற்கொலைக்கு முயன்றேன்.. பிரபல நடிகை பகீர் தகவல்!
சென்னை: தான் கர்ப்பமாக இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாக பிரபல நடிகை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி நடிகை சவும்யா சேத். இந்தியில் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
நவ்யா.. ஏஹ் ஹேய் ஆஷிகி உட்பட பல நிகழ்ச்சிகள் மூலம் பெரும் பிரபலமானார்.

ஓம் ஷாந்தி ஓம்
2017ஆம் ஆண்டு வெளியான ஓம் ஷாந்தி ஓம் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படத்தில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்தார் சவும்யா.

விவாகரத்து
சவும்யா 2015ஆம் ஆண்டு அருண் கபூர் என்பவரை திருமணம் செய்தார் சவும்யா சேத். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்தனர். மேலும் 2019ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

மகனுடன் அமெரிக்காவில்
சவும்யா சேத்துக்கு மூன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது தனது பெற்றோர் மற்றும் மகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார் சவும்யா சேத். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சவும்யா சேத் தன்னுடைய கடந்த கால அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தற்கொலை முயற்சி
அதாவது கர்ப்பமாக இருந்த போது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் பல நாட்கள் தான் சாப்பிடாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தான் கர்ப்பிணியாக இருந்த போது தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார் சவும்யா சேத்.

முகத்தை பார்க்கவே வெறுப்பு
மேலும் தனது பெற்றோர்தான் தன்னை காப்பாற்றினார்கள் என்றும் தற்கொலை எண்ணத்தில் இருந்து தான் வெளியே வர அவர்கள்தான் உதவினார்கள் என்றும் கூறியுள்ளார். அப்போதெல்லாம் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கவே வெறுப்பாக இருக்கும் என்றும் சவும்யா சேத் தெரிவித்துள்ளார்.

மகனுக்காகதான் வாழ்கிறேன்
அப்போதெல்லாம் தனக்கு வாழவே பிடிக்காமல் இருந்ததாகவும் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்னமும் தனது மூன்றரை வயது மகன் அய்டேனுக்காகத்தான் தான் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு நேசிக்கிறேன்
ஒரு வேளை கர்ப்பமாக இருந்த போது தான் தற்கொலை செய்திருந்தால் தனது மகனை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை சொல்ல முடியாமலே போயிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் சவும்யா. கணவரால் தாக்குதலுக்கு உள்ளானதால் அவரை பிரிந்ததாகவும் சவும்யா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











