பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு... அதிர்ச்சியான ரசிகர்கள்... இன்ஸ்டாவில் விளக்கம்!

மும்பை: பாலிவுட் முன்னணி நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதை சுஷ்மிதா சென்னே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
மேலும், தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும் அவர் தனது ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சுஷ்மிதா சென்னுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு

சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சுஷ்மிதா சென்னுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இரண்டு தினங்களுக்கு முன்னர் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற அதிர்ச்சியான தகவலை குறிப்பிட்டுள்ளார்.

 சிகிச்சை முடிந்தது

சிகிச்சை முடிந்தது

சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு என்ற தகவல் வெளியானதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அவர் தனது தந்தை சுபீர் சென்னுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அவரது உடல்நலம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் பலமாகவும் வைத்திருங்கள். அது மிகவும் தேவைப்படும் நேரத்தில் உங்களுடன் துணை நிற்கும் என தனது தந்தை சுபிர் சென் கூறியிருந்தார். எனக்கு இரண்டு நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து, ஸ்டென்ட் பொறுத்தப்பட்டுள்ளது என்றுள்ளார்.

 சரியான நேரத்தில் உதவி

சரியான நேரத்தில் உதவி

மேலும், மிக முக்கியமாக எனக்கு பலமான இதயம் உள்ளதாக எனது மருத்துவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். எனக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது சரியான நேரத்தில் உதவிய நிறைய பேருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மற்றொரு பதிவில் அதனை குறிப்பிடுகிறேன். எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். அதேபோல், இந்தப் பதிவு எனது நலம் விரும்புபவர்கள், அன்புக்கு உரியவர்களுக்கு மட்டுமே எனவும் அவர் பதிவிட்டுள்ளார். நான் மீண்டும் எனது வாழ்க்கைக்கு தயாராகிவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

 ரசிகர்கள் ரியாக்‌ஷன்

ரசிகர்கள் ரியாக்‌ஷன்

மிஸ் இந்தியா பட்டம் வென்ற பின்னர் சினிமாவுலகில் அடியெடுத்து வைத்த சுஷ்மிதா சென் இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தமிழில் ரட்சகன் படத்தில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கும் ஆட்டம் போட்டு அசத்தியிருந்தார். இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டது குறித்து சுஷ்மிதா சென் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சுஷ்மிதா சென் விரைவில் நலம்பெற வேண்டும் என கமெண்ட்ஸில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X