மண்ணுல குளிச்சு விளையாடும் பிரபல நடிகை.. ஒரு வாட்டி குளிக்க என்ன கட்டணம் தெரியுமா.. ஆத்தாடி!
சென்னை : நடிகை ஊர்வசி ரவுத்தலா சேற்றை வாரி பூசிக்கொண்டு அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மண் குளியல் உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி சருமத்தை மென்மையாக வைத்து இருக்கிறது.
இந்த மண் குளியலிருக்கு ரூ20 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மாடல் அழகி
மாடல் அழகியான ஊர்வசி ரவுத்தலா பல அழகிப்போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். குறிப்பாக 2015-ம்ஆண்டு நடைபெற்ற 'மிஸ் யூனிவர்ஸ்' போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார் இவர். பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

நாயகியாக
விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த லெஜெண்ட் சரவணன், அதை தாண்டி திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
Recommended Video

ஐஐடி பெண்ணாக
உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர்கள் இயக்கி வரும் இப்படத்தில், ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கதாபாத்திரத்தில் ஊர்வசி ரவுத்தலா நடித்து வருகிறார்.

பாம்புடன்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் கூட நீச்சல் குளத்தில் பாம்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் பீதியில் ஆழ்த்தினார்.

ரூ20 ஆயிரம் கட்டணம்
தற்போது, உடல் முழுக்க சேற்றை பூசிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், அதில், கிளியோபாட்ரா ஒரு மண் குளியல் காதலராககே இருந்தார். கனிம வளமான மண் சிகிச்சை சருமத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. மண் உண்மையில் அற்புதமாக இருக்கிறது. அசுத்தங்களை வெளியேற்றி சருமத்தை மென்மையாக வைத்து இருக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் வலிகளையும், வலிகளை குறைக்கவும் உதவுகிறது என்று ஊர்வசி ரவுத்தலா கூறியுள்ளார். இந்த மண் குளியலிருக்கு ரூ20 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











