லீக்கான குளியல் அறை வீடியோ.. இப்படி கூடவா செய்வார்கள்.. மனம் நொந்த ஊர்வசி ரவுதெலா!

சென்னை: லெஜண்ட் சரவணன் நடித்த லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறிய நடிகை ஊர்வசி ரவுதெலாவின் குளியலறை வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் புயலை கிளப்பிய நிலையில், இந்த வீடியோ குறித்து முதன் முறையாக மனம் வருந்தி பேசி உள்ளார்.

மாடல் அழகியான ஊர்வசி ரவுதெலா பல அழகிப்போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். குறிப்பாக 2015-ம்ஆண்டு நடைபெற்ற 'மிஸ் யூனிவர்ஸ்' போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார். இவர், Singh Saab the Great என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வரும் இவர், அனைவரும் உச்சுகொட்டும் அளவுக்கு கவர்ச்சியில் அதகளம் செய்து வருகிறார். கன்னடம், தெலுங்கு, பெங்காலி, தமிழ் மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

Bollywood Urvashi Rautela

குளியல் அறை வீடியோ: தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவரின் குளியலறை வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்து பெரும் புயலை கிளப்பியது. அந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த வீடியோ ஊர்வசிக்கு தெரியாமல் வெளியாக வாய்பே இல்லை என்றும், இது படத்திற்கான ப்ரோமோஷன் வீடியோ என்றும் கருத்துக்கள் பரவின. இருப்பினும் ஊர்வசியின் தீவிர ரசிகர்கள், அந்த வீடியோவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

மனம் வருந்திய நடிகை: ஒரு வாரத்திற்கும் மேலாக புகைந்து கொண்டு இருக்கும் இந்த வீடியோ குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் மௌனமாக இருந்த ஊர்வசி, அந்த வீடியோவைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்படி செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அந்த வீடியோ நான் நடித்து வரவிருக்கும் திரைப்படமான குஸ்பைதியா படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி. இது எனது நிஜ வாழ்க்கையோ அல்லது அதிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவோ இல்லை.

Bollywood Urvashi Rautela

'குஸ்பைத்தியா' திரைப்படம், ஆகஸ்ட் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் டிஜிட்டல் ஆபத்துகளை வெளிச்சம் போட்டு காட்டும் திரைப்படமாகும். இப்படத்தில் வினீத் குமார் சிங் மற்றும் அக்‌ஷய் ஓபராய் இணைந்து நடித்துள்ளனர் என்றார்.

More from Filmibeat

Read more about: bollywood urvashi rautela
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X