200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் லெஜண்ட் சரவணா படம்.. பிரபல பாலிவுட் நடிகையை ஹீரோயினாக்கிய படக்குழு!
சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது லெஜண்ட் சரவணாவின் அறிமுக படம்.
Recommended Video
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
இயக்குநர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படத்துக்கு தற்போது பாலிவுட் ஹீரோயினை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பட பூஜை
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் லெஜண்ட் சரவணா நடிக்கும் அறிமுக படத்தின் பூஜை கோலாகலமாக போடப்பட்டது. விசில், உல்லாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் ஹீரோவாக நடிக்கும் படம் தொடங்கியது. இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நயன்தாரா நடிக்கல
10 கோடி சம்பளம் வரைக்கும் நடிகை நயன்தாராவுக்கு கொடுக்க படக்குழு ரெடி என்றும் ஆனால், நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதே போல விளம்பரப்படத்தில் லெஜண்ட் சரவணா உடன் இணைந்து நடித்த ஹன்சிகா, தமன்னா ஆகியோரும் இந்த படத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றும் பேசப்பட்டது.

ஹீரோயின் மாற்றம்
பிரபு, நாசர், விவேக், கோவை சரளா மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும், நாயகியாக பாலிவுட் நடிகை கீதிகா திவாரியை களமிறக்கினர். பட பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். இந்நிலையில், தற்போது கீதிகா திவாரிக்கு பதிலாக இன்னொரு பிரபல பாலிவுட் நடிகை படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிளாமர் குயின்
இந்நிலையில், தற்போது பாலிவுட்டின் கிளாமர் குயினான ஊர்வசி ரவுத்தேலா தான் லெஜண்ட் சரவணாவுக்கு நாயகி என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 2019ம் ஆண்டு பட பூஜை போடப்பட்டாலும், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தொடங்கவில்லையாம். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். மணாலியில் முதல் ஷெட்யூலையும் ஊர்வசி ரவுத்தேலா முடித்து விட்டாராம்.

200 கோடி பட்ஜெட்
ஆரம்பத்தில் 100 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் தற்போதைய பட்ஜெட் 200 கோடியாம். மேலும், சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் ஜேடி ஜெர்ரி வேற லெவலில் பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்கி வருகிறாராம்.

நாயகிக்கு என்ன ரோல்
பாலிவுட்டில் வெளியான ஹேட் ஸ்டோரி 4, கிரேட் கிராண்ட் மஸ்தி, பாகல் பன்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்த ஊர்வசி ரவுத்தேலா இந்த படத்தில் மைக்ரோ பயாலஜிஸ்ட் படிக்கும் ஐஐடி மாணவியாக நடித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. சமீபத்தில் படத்தின் ஆக்ஷன் காட்சி புகைப்படங்கள் கசிந்த நிலையில், தற்போது நாயகி குறித்த அசத்தல் தகவல்கள் கசிந்துள்ளன.

முதல்முறை
பாலிவுட் நாயகியான ஊர்வசி ரவுத்தேலா இதற்கு முன் கன்னட படமான ஐராவதாவில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், தற்போது பிளாக் ரோஸ் எனும் தெலுங்கு மற்றும் இந்தி பைலிங்குவல் படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் ஊர்வசி ரவுத்தேலா லெஜண்ட் சரவணா படத்தின் மூலம் தான் அறிமுகமாகவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.


Click it and Unblock the Notifications











