vidya balan: பாய்ந்து வந்து முத்தம்.. வித்யா பாலன் கேட்ட கேள்வி.. பாத்ரூமுக்கு ஓடிய நடிகர்!

மும்பை: பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கும் வித்யா பாலன், பரினீதா இந்த படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். அதைத் தொடர்ந்து லகே ரஹோ முன்னா பாய், பூல் புலையா போன்ற வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். படத்தில் பிஸியாக நடித்து வரும் இவர், படப்பில் பிரபல நடிகர் தன்னிடம் நடந்து கொண்ட முறை குறித்து பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார்.

நடிகை வித்யா பாலன், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான "தி டர்ட்டி பிக்சர்" படத்தில் நடித்து அனைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த வித்யா பாலன், நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் திருமணமான பிறகும், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், பிரபல நடிகர் பற்றி பேசி உள்ளார்.

Bollywood actress vidya balan
Photo Credit:

பாய்ந்து வந்த நடிகர்: அதில், ஒரு படத்தில் பிரபல நடிகருடன் நெருக்கமாக அதாவது முத்தக் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை படமாக்குவதற்கு முன்பு உணவு இடைவேளை வந்து விட்டதால், உணவு இடைவேளைக்கு பிறகு அந்த நெருக்கமான காட்சியை எடுத்துக் கொள்ளலாம் என இயக்குனர் கூறினார். இதைத் தொடர்ந்து அனைவரும் சாப்பிட சென்றனர். நான், அடுத்து நெருக்கமான காட்சி என்பதால், உணவை தவிர்த்துவிட்டு பழங்களை சாப்பிட்டேன். ஆனால், அந்த நடிகரோ, சைனீஸ் உணவு வகைகளை ஒரு பிடி பிடித்துக் கொண்டு இருந்தார்.

நான் கேட்ட கேள்வி: சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அந்த நெருக்கமான முத்தக் காட்சி படம் பிடிக்க ஆரம்பித்தார்கள். அந்த நடிகர் பாய்ந்து என் அருகில் வந்தவுடன், உணவின் வாடை அப்படியே இருந்தது. அப்போது நான், நீங்கள் பிரஷ் செய்யவில்லையா என்று கேட்டேன். அதற்கு அந்த நடிகர் எதற்காக என்று எதுவுமே புரியாமல் கேட்டார். உடனே அவரிடம் உங்களுக்கு பார்ட்னர் என யாராவது இருக்கிறார்களா என்று கேட்டேன். அந்த வார்த்தையை நான் கேட்ட பிறகு தான் அந்த நடிகருக்கே நான், எதனால் அப்படி சொல்கிறேன் என்பது புரிய வந்தது. அதன் பிறகு தான் அந்த நடிக பிரஷ் செய்து விட்டு வந்தார். இப்படி நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது பலவிதமான சங்கடங்கள் வரத்தான் செய்கின்றன. அதையும் சமாளித்து நடிக்க வேண்டி இருக்கிறது என நடிகர் வித்யா பாலன் கிண்டலாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X