இன்று பிறந்த நாளை கொண்டாடும் அஜித் பட நடிகையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மும்பை: நடிகை வித்யா பாலன் இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்கிறார் வித்யா பாலன். இவர் டர்டி பிக்சர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இவர், தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருப்பார். அந்த படத்தில் சிறிது நேரமே வந்தாலும் அந்த காட்சி மனதை தொட்டுச்சென்றது.

2003ம் ஆண் பாலோ தோகோ என்ற வங்காளத் திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார் வித்யாபாலன். இதையடுத்து இந்தியில் தனது அறிமுகத்தை கொடுத்த இவர், பரினீதா திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.
நடிகை வித்யா பாலன்: அதையடுத்து லகே ரஹோ முன்னாபாய், ஹே பேபி மற்றும் பூல் மலையா, ஓம் சாந்தி ஓம் ஆகிய படங்களில் நடித்தார். பூல் மலையாவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார். இதைத்தொடர்ந்து, மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய வெளிப்படுத்திய வித்யாபாலன், பல இடத்தில் சில்க் ஸ்மிதாவை கண்முன் கொண்டுவந்தார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்காக தேசிய விருதினைப்பெற்றார். அந்தப்படத்தின் வெற்றிக்குப்பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

காதல் திருமணம்: நடிகை வித்யா பாலன் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென உடல் எடை அதிகரித்து காணப்பட்டு பல உருவகேலியை எதிர்கொண்டார். இதையடுத்து,யுடிவு நிறுவனத் தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான சித்தார்த் ராயை காதலித்து வருவதாகவும் அவருடன் டேட்டிங் செல்வதாகவும், வெளிப்படையாக அறிவித்தார். இதையடுத்து இருவரும், 2012ம் ஆண்டு மும்பை பாந்த்ரா நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தில்: சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சகுந்தலா தேவி திரைப்படம் நல்ல வரவேற்றைப் பெற்றது. இதையடுத்து வித்யா பாலன் நட்கத் என்னும் குறும்படத்தில் நடித்தார். இப்படம் ஏராளமான விருதுகளை வென்ற இவர், தற்போது லவ்வர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகையான வித்யா பாலன், தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அவரின் மனைவியாக நடித்து, தமிழ் ஆடியன்சுக்கும் தெரிந்த முகமாக மாறி உள்ளார்.
வித்யா பாலன் சொத்து: இந்நிலையில் இன்று 45வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வித்யாபாலனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவரின் மொத்த சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 136 கோடி சொத்துவைத்திருக்கும் வித்யா பாலன், ஒரு திரைப்படத்திற்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாக்குகிறார். மும்பையில் ஒரு ஆடம்பர வீடு மற்றும் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களையும் அவர் குவித்து வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











