சோனாலி போகத் கொலை செய்யப்பட்டுள்ளார்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சித் தகவல்!

மும்பை : பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர் சோனாலி போகத்.

Recommended Video

Liger Public Review |Liger Tamil Cinema Review | Vijay Deverakonda |*Review

இந்தியின் பிக்பாஸ் சீசன் 14 போட்டியில் போட்டியாளராக சோனாலி போகத் கலந்துக் கொண்டார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர் மரணமடைந்தார்.

சோனாலி போகத் தனது 41வது வயதில் உயிரிழந்த நிலையில், அவரது மரணம் பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் பிரபலம்

இந்திய அளவில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக இருந்து வருகிறது. இதில் இந்தியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14வது சீசனின் போட்டியாளராக சோனாலி போகத் கலந்துக் கொண்டார்.

நடிகை சோனாலி போகத்

நடிகை சோனாலி போகத்

ஏக் மா ஜோ லக்கான் கி லியே பனி அம்மா என்ற சீரியல் மூலம் அறிமுகமான போகத், தொடர்ந்து தி ஸ்டோரி ஆப் பத்மாஷ்கர் என்ற வெப் சீரிசிலும் நடித்தார். மேலும் டிக்டாக்கிலும் சிறப்பாக செயல்பட்டுவந்த இவர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 கேள்விகளை எழுப்பிய மரணம்

கேள்விகளை எழுப்பிய மரணம்

முதலில் போலீசார் ரிப்போர்ட்டில் சோனாலிக்கு மாரடைப்பு என்றே கூறப்பட்டது. இதையடுத்து இது என்ன சாகும் வயதா என்று ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கேள்வி எழுப்பியிருந்தனர். தொடர்ந்து இவரது உயிரிழப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

சோனாலி கொலை செய்யப்பட்டார்

சோனாலி கொலை செய்யப்பட்டார்

இந்நிலையில் தற்போது சோனாலியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில் இவர் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை என்றும் இதுஒரு கொலை என்றும் பதிவாகியுள்ளது. இதனிடையே சோனாலியின் சகோதரர் இதுதொடர்பாக இருவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு

போலீசார் வழக்குப்பதிவு

இதையடுத்து அவர்கள்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அர்ஜுனா காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோனாலியின் உடலின் பல இடங்களில் காயங்கள் இருப்பதும் பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

மர்ம முடிச்சுகள்

மர்ம முடிச்சுகள்

இந்தக் கொலைக்கான காரணங்கள் தெரியாத நிலையில், அந்த இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கொலைக்கான காரணங்கள் இன்னும் மர்ம முடிச்சாகவே காணப்படும் நிலையில் விரைவில் ஒவ்வொன்றாக அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X