பாலிவுட் பிக்பாஸ் சல்மான் கானுக்கு ஹேப்பி பர்த்டே.. ட்விட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானின் 54வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பாலிவுட்டில் பல பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்களை கொடுத்து வரும் சல்மான் கானுக்கு உலகளவில் மிகப்பெரிய ஃபேன் பேஸ் உள்ளது.

#HappyBirthdaySalmanKhan என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி சல்மான் கான் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை இந்தியளவில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

பிரபலங்கள் பலரும் சல்மான் கானுக்கு தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

பாலிவுட் தல

சல்மான் கான் படங்கள் தோல்வியை சந்தித்தாலும், வெற்றியை சந்தித்தாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு கொடுக்கும் சப்போர்ட் வேற லெவல். கோலிவுட்டில் எப்படி தல அஜித்தோ அதே போல பாலிவுட்டில் சல்மான் கானுக்குத் தான் ஃபேன் பேஸ் அதிகம்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக் பிரதர் எனும் வெளிநாட்டில் வைரலான ஷோவை இந்தியாவின் இந்தியில் அறிமுகப்படுத்தி தொகுத்து வழங்கி வருகிறார் இந்த பாலிவுட் பிக்பாஸ். தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 சீசன்களை கடந்துள்ளது. ஆனால், இந்தி பிக்பாஸோ 13வது சீசனை எட்டியுள்ளது.

சுல்புல் பாண்டே

தபங் படத்தில் சல்மான் கானின் சுல்புல் பாண்டே பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனது ட்விட்டர் ஐடியில், சுல்புல் பாண்டே என்ற பெயரோடு தான் சல்மான் கான் உலா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கான் நடிகர்கள்

பாலிவுட்டின் முன்னணி கான் நடிகர்களான ஆமீர் கான், ஷாருக்கான் சல்மான் கான் என மூவரும் நெருங்கிய நண்பர்களாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் ஜீரோ படத்திலும் சல்மான் கான் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். ஆனால், தமிழில் விஜய் - அஜித் இப்படி சேர்ந்து நடிப்பார்களா என்பது சந்தேகம் தான்.

ஹேப்பி பர்த்டே சல்மான் பாய்

ஹேப்பி பர்த்டே சல்மான் பாய்

27 டிசம்பர் 1965ம் ஆண்டு இந்தூரில் பிறந்த சல்மான் கான் இன்று தனது 54வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சல்மானின் முழுப் பெயர் அப்துல் ரஷித் சலீம் சல்மான் கான். சல்மான் கானின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு பல பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.

ரகுல் ப்ரீத் சிங் வாழ்த்து

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங் சல்மான் கானுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து சல்மான் கானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X