Don't Miss!
- News
ஜான் பாண்டியன் ஒரே போடு.. நடையா நடந்தேனே.. "தேவேந்திரன் நரேந்திரன்".. ஆஹா.. மேலிடம் வரை ஒலித்த குரல்
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Sports
ரோகித்திற்கு பெரிய சம்பவம் இருக்கு.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் பயிற்சியாளர் சுவாரஸ்ய தகவல்!
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கமல் போல கொடி நாட்டுவாரா விஜய் சேதுபதி.. இந்தியில்!
சென்னை: தனது நடிப்பால் இந்தித் திரையுலக சூப்பர் ஸ்டார்களை மிரள வைத்தவர் கமல்ஹாசன். தென்னிந்தியாவிலிருந்து இந்திக்குப் போய் கொடி நாட்டிய ஒரே நாயகன் கமல்ஹாசன் மட்டுமே.
இப்போது விஜய் சேதுபதிக்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பு வந்துள்ளது. இந்தியில் நடிக்கும் வாய்ப்புகள் விஜய் சேதுபதியைத் தேடி வந்துள்ளன. தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து வித்தியாசமான நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி.
அந்த வரிசையில் இந்தியிலும் கமலைப் போலவே விஜய் சேதுபதியும் தனி முத்திரை பதிப்பாரா என்ற பெரும் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தி வாய்ப்பு
மலையாளம், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தி படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு விஜய் சேதுபதிக்கு தமிழில் அதிக படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதோடு மலையாளத்தில் மார்கோனி மத்தாய், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆமிர்கானுடன்
சமீபத்தில் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படப்பிடிப்பிற்கு, பாலிவுட் நடிகர் அமீர் கான் வந்திருந்தார். ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப் படத்தை ஆமிர்கான் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியில் விக்ரம் வேதா
இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிப் பிரம்மாண்ட வெற்றி பெற்ற படமாக அமைந்த விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் முதலில் ஷாருக்கான் நடிப்பதாக இருந்து இப்போது அமீர்கான் வேதா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மாதவன் கதாபாத்திரத்தில் சாயிப் அலிகான் நடிக்க உள்ளார்.

பாராட்டிய ஷாருக் கான்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இந்திய திரைப்பட விழா இன்றுடன்(ஆகஸ்டு 15ஆம் தேதி) முடிவடையவுள்ளது. இந்த விழா மேடையில் பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அசாத்தியமானது என்றார்.

ஆச்சரியமில்லை
விஜய் சேதுபதியை எதார்த்தமான நடிகர் என வெகுவாக பாராட்டி பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான் , அவரை கட்டியணைத்து என் வாழ்நாளில் நான் கண்ட சிறந்த மனிதர் அற்புதமான நடிகர் நீங்கள் என்று விஜய் சேதுபதியை பாராட்டியுள்ளார். ஆமிர்கானோடு நடிக்கும் விஜய் சேதுபதி அடுத்து ஷாருக்கானுடன் நடித்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.
-
தளபதி 67 டீம்.. விமானத்தில் பறக்கும் வீடியோவே ரிலீஸ்.. ஏஜென்ட் டினா இருக்காங்க கவனிச்சீங்களா!
-
வெளியானது பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள்... ஏஆர் ரஹ்மான் வாய்ஸில் சிம்பு மாஸ் காட்டும் நம்ம சத்தம்
-
தளபதி 67 டைட்டில் இதுதானா? குருதியில் புள்ளி வைத்து விஜய்யின் உருவத்தை கோலம் போட்டது அதுக்குத்தானா?