பணிப்பெண்களை அடிப்பது, முகத்தில் தட்டை வீசுவது, எட்டி உதைப்பதுமாக உள்ள பாலிவுட் பிரபலங்கள்

By Siva

மும்பை: பாலிவுட் பிரபலங்கள் தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களை அடித்து நொறுக்குவது, சம்பளம் கொடுக்காமல் இருப்பதுடன் முகத்தை தட்டை வீசுவார்களாம்.

பாலிவுட் பிரபலங்களின் வீடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வரும் நிறுவனம் ஹேப்பி மெய்ட்ஸ் சர்வீசஸ். அந்த நிறுவனத்தின் இயக்குனர் அபிஷேக் சாப்லே பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியின்போது அவர் மற்றும் பெயர் தெரிவிக்க மறுத்த பிற சர்வீஸ் நிறுவனத்தார் கூறுகையில்,

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட் பிரபலங்களின் வீடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பி வைக்கும் கான்டிராக்ட்களை எடுப்பதை நிறுத்திவிட்டேன். துவக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 5 முதல் 6 பிரபலங்களின் வீடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பி வைத்தேன்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

சில பிரபலங்கள் மட்டுமே நல்லவர்கள். மற்றவர்கள் பணியாட்களுக்கு ஒழுங்காக சாப்பாடு கூட தருவது இல்லை. அவர்களுக்கு உணவு பிடிக்காவிட்டால் தட்டை தூக்கி பணிப்பெண்ணின் முகத்தில் வீசுவார்கள்.

உதை

உதை

பிரபலங்கள் இரவில் லேட்டாக தான் வீட்டிற்கு வருவார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் பணிப்பெண்ணை எட்டி உதைத்து சமைக்க சொல்வார்கள். இது குறித்து போலீசுக்கு போயும் பலனில்லை. ஒரு நடிகர் பணிப்பெண் மீது பொய்யாக திருட்டுப் பழி போட்டார்.

நடிகை

நடிகை

விவாகரத்தான நடிகை தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நடிகர்களின் குடும்பத்தை சேர்ந்த அவர் பணிப்பெண்ணுக்கு நேரத்திற்கு சாப்பாடே கொடுக்க மாட்டார்.

சம்பளம்

சம்பளம்

இந்த பிரபலங்கள் சம்பளத்தை கொடுக்க மறுப்பார்கள். அனைவரும் அவர்களின் வீடுகளில் வேலை செய்ய தவம் கிடப்பதாக அவர்களுக்கு நினைப்பு. சம்பள விஷயத்தில் எப்பொழுதுமே பிரச்சனை செய்வார்கள்.

அடி

அடி

பிரபலங்கள் பணிப்பெண்களை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பல பணிப்பெண்கள் காயங்களுடன் எங்கள் அலுவலகங்களுக்கு வந்துள்ளனர். போலீசுக்கு போக அவர்கள் தயாராக இல்லை என்பதால் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை.

தேசிய விருது

தேசிய விருது

பணிப்பெண்களை அடிப்பது, எட்டி உதைப்பது, அசிங்கமாக திட்டுவது, கேவலமாக நடத்துவதுமாக உள்ளனர் பிரபலங்கள். இதில் பலர் ரசிகர்களின் ரோல் மாடல்களாக உள்ளவர்கள், சிலர் தேசிய விருது பெற்றவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X